Aran Sei

‘கொரோனா தடுப்பூசி எல்லா மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்’ – ராஜஸ்தான் முதல்வர்

கொரோனா தொற்று தடுப்பூசி நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கேலோட் வலியுறுத்தியுள்ளார்.

இதன் வழியாக, தடுப்பூசி கிடைப்பது குறித்தும் அதன் விலை குறித்தும் சந்தேகங்களை நீக்கி, பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவது சந்தேகம் – நிபுணர் குழு தலைவர்

நேற்று (டிசம்பர் 21), ராஜஸ்தான் மாநில கொரோனா தொற்று நோய் பரவலின் நிலை குறித்து நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்மாநில முதல்வர் அசோக் கெஹ்லோட் கலந்துக்கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, ”தொற்றுநோயால் ஏற்பட்ட ஊரடங்கால் நாட்டில் பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனால், நாட்டில் பெரும் பகுதியினர் தடுப்பூசியின் விலை கொடுத்து வாங்க முடியாத சூழலில் உள்ளனர். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இலவச தடுப்பூசி பெற வேண்டும். மற்ற அனைத்து தடுப்பூசிகளையும் போலவே, இதுவும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி – பாஜகவின் பீகார் தேர்தல் வாக்குறுதியும் உண்மை நிலவரமும்

மேலும், “மத்திய அரசு இதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதன் வழியாக, கொரோனா தடுப்பூசி கிடைப்பது குறித்தும் அதன் விலை குறித்தும், பொதுமக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களை நீக்கி நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்துகள் சோதனை முடிவுகள் – விலை கட்டுப்படியாகுமா?

”மருத்துவ மற்றும் அத்தியாவசிய சேவைத் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ராஜஸ்தான் மாநில நிர்வாகத்தின் நுண்ணிய திட்டமிடல்கள் வழியாக மாநிலத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்மாதிரியாக்கியதை போல, தடுப்பூசி வழங்கலிலும் முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதில் அரசு கவனம் செலுத்தும்.” என்று கேலோட் உறுதியளித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்