Aran Sei

இஸ்லாமியர்களின் தொழுகைக்கு ஒதுக்கப்பட்ட ரயில் நிலைய ஓய்வறை: தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலென வலதுசாரிகள் எதிர்ப்பு

பெங்களூரு கிராந்திவீர சங்கோலி ராயண்ணா ரயில் நிலையத்தில் வேலை பார்க்கும் சுமை தூக்குபவர்களின் ஓய்வறை இஸ்லாமியர்களின் தொழுகைக்காகப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து வலதுசாரி அமைப்பான இந்து ஜனஜக்ருதி சமிதி இந்திய ரயில்வேக்கு கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில், “இது தேசியப் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல். இதனை அனுமதித்தால் அவர்கள் ரயில் நிலையத்தைப் பள்ளிவாசலாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை கூட வைக்கலாம்” என்று இந்து ஜனஜக்ருதி சமிதி கூறியுள்ளது.

பெங்களூரு கிராந்திவீர சங்கோலி ராயண்ணா ரயில் நிலையத்தில் வேலை பார்க்கும் சுமை தூக்குபவர்களின் ஓய்வறையில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதைப் பார்த்த இந்து ஜனஜக்ருதி சமிதி அமைப்பினர் இத்தகைய பிரார்த்தனைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று ரயில் நிலைய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

“எத்தனை காலமானாலும் நீங்கள் தமிழ்நாட்டை ஆள முடியாது” – பாஜகவை புரட்டியெடுத்த ராகுல் காந்தி

“தொழிலாளர்களின் ஓய்வறையை இஸ்லாமியர்களின் தொழுகைக்கான இடமாக மாற்றியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்றும் இதனைத் தடுத்தது நிறுத்தாவிட்டால் கடும் போராட்டம் நடத்தப்படும்’ என்று ரயில் நிலைய மேலாளருக்கு இந்து ஜனஜக்ருதி சமிதியின் செய்தித் தொடர்பாளர் மோகன் கவுடா கடிதம் எழுதியுள்ளார்.

பயணிகளுக்கு இடையூறு விளைவிக்காமல் பல ஆண்டுகளாக இந்த பிரார்த்தனை மண்டபம் ரயில் நிலையத்தில் உள்ளதாகவும் மேலும் இங்கு 2 கோவில்களும், கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்யும் சிறிய அறையும் உள்ளதாகத் தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.

“தொழிலாளர்கள் ஓய்வெடுக்கவும், குளிக்கவும், தொழுகை, பூஜை, பிரார்த்தனை செய்யவும் இந்த ஓய்வறைகளை பயன்படுத்தலாம். அனைத்து மதத்தினரும் ஒன்றாக வாழட்டும், மத நம்பிக்கை என்பது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம், யாரையும் தொந்தரவு செய்யாமல் அவர்கள் உள்ளே பிரார்த்தனை செய்யலாம்” என்று ரயில்வே முதுநிலைக் கோட்ட வணிக மேலாளர் கிருஷ்ணா ரெட்டி தி வயரிடம் தெரிவித்துள்ளார்.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்