காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், அமைச்சர் இமார்த்தி தேவி குறித்து மரியாதை குறைவாகப் பேசியது துரதிருஷ்டவசமானது எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 3ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. டாப்ரா தொகுதியில் பாஜக சார்பாக இமார்தி தேவி போட்டியிடுகிறார்.
இவர், காங்கிரசிலிருந்து பாஜகவுக்கு கட்சி மாறிய ஜோதிராதித்யா சிந்தியா தலைமையிலான 21 எம்எல்ஏ -களில் ஒருவராவார். எம்எல்ஏ-கள் கட்சி மாறியதால் கமல்நாத் அரசு கவிழ்ந்தது.
பாஜகவில் இணைந்த இமார்தி தேவிக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. தற்போது அவர் டாப்ரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து களமிறங்கியுள்ளார்.
அத்தொகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற கமல்நாத், ‘‘காங்கிரஸ் சார்பில் இத்தொகுதியில் போட்டியிடுபவர் மிகவும் சாதாரணமானவர். ஆனால், இவை எதிர்த்து போட்டியிடுபவர் ஒரு ‘அயிட்டம்’’’ என்று தரக்குறைவாக கருத்து தெரிவித்தார்.
கமல்நாத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் போபாலில் 2 மணி நேரம் மவுன போராட்டத்தில் ஈடுபட்டார்.
#WATCH Kamal Nath ji is from my party but personally, I don't like the type of language that he used…I don't appreciate it, regardless of who he is. It is unfortunate: Congress leader Rahul Gandhi on the former Madhya Pradesh CM's "item" remark pic.twitter.com/VT149EjHu0
— ANI (@ANI) October 20, 2020
“பெண்களை யாரும் மரியாதைக் குறைவாக நடத்தக் கூடாது. கமல்நாத் என்னுடைய கட்சியைச் சேர்ந்தவர். ஆனால், அவர் பயன்படுத்திய மொழி எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை. இதை நான் ஊக்குவிக்க மாட்டேன். அவர் இவ்வாறு பேசியது துரதிருஷ்டவசமானது,” எனக் கேரள மாநிலம் வயநாட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கமல்நாத்தின் கருத்து குறித்து விளக்கம் கேட்டுத் தேசிய மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கமல்நாத்தின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து, அவரைக் கட்சியின் அனைத்துப் பதிவியிலிருந்தும் நீக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கடிதம் எழுதியுள்ளார்.
Madhya Pradesh CM Shivraj Singh Chouhan replies to Kamal Nath's letter over the Congress leader's "item" remark.
"I believe you should tender an honest apology… Learn to love people of the state. Despite you not belonging to MP, its people are trying to accept you," it reads. https://t.co/BgrSUUE3hQ pic.twitter.com/swgFsrLMXR
— ANI (@ANI) October 20, 2020
முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீங்கள் நேர்மையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மாநில மக்களை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் மத்தியப்பிரதேசத்துக்கு சொந்தமானவர் அல்ல என்றாலும், அதன் மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ள முயற்சிக்கிறார்கள்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.