Aran Sei

விவசாயிகளின் மரணம் : ‘கண்ணீரை துடைக்காமல் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசுகிறது மோடி அரசு’

போராடும் விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டிய அரசு அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, நேற்று (ஜனவரி 5) அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,”மோடி அரசின் அக்கறையின்மையும் ஆணவமும் தான் 60 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிரைக் பறித்திருக்கின்றன. போராடும் விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்பதற்குப் பதிலாக, இந்திய அரசு அவர்களை கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் தாக்குவதில் தீவிரமாக உள்ளது.” என்று விமர்சித்துள்ளார்.

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் – அஞ்சலி செலுத்தும் 1 லட்சம் கிராமங்கள்

மேலும், ”இதுபோன்ற இரக்கமற்ற செயல்களும், வெறிபிடித்தது போன்ற செயல்களும் முதலாளிகளின் வணிக நலன்களை மேம்படுத்துவதற்காக மட்டுமே செய்யப்படுகிறது. மூன்று விவசாய சட்டங்களையும் உடனே நீக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

நன்றி : thefederal.com

த்திய அரசு கொண்டுவந்த புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் போது, விபத்துக்கள், தற்கொலைகள், நோய் மற்றும் மோசமான வானிலை காரணமாக 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் இழந்துள்ளதாக அகில இந்திய விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.

கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயிகள் – படங்களை ஏந்தி போராடும் தாய்மார்கள்

விவசாயிகள் மட்டுமல்லாது, வழக்கறிஞர்கள், மதகுருகளும் விவசாய சட்டங்களை நீக்கக்கோரி தற்கொலை செய்கின்றனர்.

பஞ்சாபின் ஜலாலாபாதைச் சேர்ந்த வழக்கறிஞர் அமர்ஜித் சிங் ராய், பாரதிய கிசான் யூனியன் – உக்ரஹான் என்ற விவசாய சங்கத்துடன் இணைந்து டெல்லியின் திக்ரி எல்லையில் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

போராட்டக் களத்தில் மற்றொரு உயிரிழப்பு – தற்கொலைக்கு அரசே காரணம் என்று விவசாயி கடிதம்

சமீபத்தில், அவர் விவசாய பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இறப்பதற்கு முன்பு இரண்டு கடிதங்களை கொடுத்துள்ளதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

பிரதமருக்கு எழுதிய ஒரு கடிதத்தில், பிரதமர் ’அகங்காரத்துடன்’ நடந்து கொள்வதாகவும், ’முதலாளிகளின் (அம்பானி, அதானி) நலன்களுக்காக’ அவர் சிறப்பாக வேலை செய்வதாகவும் அமர்ஜித் சிங் ராய் குறிப்பிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்