Aran Sei

அன்று பிரிட்டிஷ் இன்று மோடி : சத்யாகிரகத்தைத் தொடங்கிய விவசாயிகள் – ராகுல் காந்தி

விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை, பிரிட்டிஷ் ஆட்சியின் போது நடந்த சம்பரன் போராட்டத்துடன் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி ஒப்பிட்டுள்ளார்.

தற்போதைய போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு விவசாயி-தொழிலாளரும் ஒரு ‘சத்தியாக்கிரஹி’ என்றும் அவர்களுக்கான உரிமையை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்லி போராட்டத்தில் பலியாகும் விவசாயிகள் : ’உணர்ச்சியற்று’ இருக்கும் அரசாங்கம்

இதுகுறித்து, இன்று (ஜனவரி 3) அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார். அதில், “நாடு ஒரு சாம்பரன் போன்ற பெரும் சோகத்தை எதிர்கொள்ளப் போகிறது. ஆப்போது ஆங்கிலேயர்கள் தான் ‘கம்பெனி பகதூர்’. இப்போது மோடியும் அவர் நண்பர்களும் தான் ‘கம்பெனி பகதூர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு விவசாயி-தொழிலாளியும் ஒரு ‘சத்தியாகிராஹி’, அவர்கள் தங்கள் உரிமைகளை திரும்பப் பெறுவார்கள்.” என்று உறுதிப்பட கூறியுள்ளார்.

’விவசாயி மகனின் அரசு போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவுகிறது’ – இரா.முத்தரசன் கண்டனம்

பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் பீகாரின் சம்பரன் மாவட்டத்தில் ஒரு விவசாயிகளின் எழுச்சி நடந்தது.  அங்கு நிலமற்ற ஏழை விவசாயிகளும், ஒப்பந்தத் தொழிலாளர்களும் உணவுப் பயிர்களைப் பயிரடாமல், பிரிட்டிஷ் காலனிய அரசு பணப்பயிர்களை பயிரிட கட்டாயப்படுத்தியது.

இதனால் விவசாயிகளுக்கு தேவையான உணவு கிடைக்கவில்லை. மேலும் அந்த பணப்பயிரினை மிகக் குறைந்த விலையில், அரசு ஆதரவு பெற்ற பண்ணையார்களுக்கு விற்க பிரிட்டிஷ் அரசு கட்டாயப்படுத்தியது. அதனால், 1910களில் இம்மாவட்டத்தில் பஞ்சம் எற்படும் நிலை உருவானது.

பிரதமரின் ’மன் கி பாத்’ நிகழ்ச்சியைக் கலாய்த்த விவசாயிகள்

1917 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் சம்பரன் சத்தியாக்கிரகம் இருந்தது. இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்