Aran Sei

“இந்தியா இனிமேலும் ஜனநாயக நாடாக இல்லை ” – ராகுல் காந்தி

ந்தியா இனிமேலும் ஜனநாயக நாடாக இல்லை என்று ஸ்வீடன் நாட்டு அறிக்கையை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

ஸ்வீடனைச் சேர்ந்த வீ-டெம் இன்ஸ்டிட்யூட் தனது அறிக்கையில் இந்தியாவை ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு’ என்பதிலிருந்து ‘தேர்தல் எதேச்சாதிகார நாடு’ என்று தகுதி குறைப்பு செய்திருந்தது.

தேர்தல் ஜனநாயகத்தில் இருந்து தேர்தல் எதேச்சதிகார நாடாக மாறி வரும் இந்தியா – ஸ்வீடன் ஆராய்ச்சி நிறுவன ஆய்வில் தகவல்

அமெரிக்க அரசு நிதி உதவி பெறும் அரசு சாரா மனித உரிமைகள் அமைப்பான ஃப்ரீடம் ஹவுசின் அறிக்கையில் இந்தியா “சுதந்திரமான” என்பதிலிருந்து “பகுதியளவு சுதந்திரமான” என்று தரக்குறைப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஸ்வீடன் நாட்டு அறிக்கை வெளியாகியுள்ளது.

“நரேந்திர மோடி 2014-ல் பிரதமர் ஆன பிறகு இந்தியாவில் அரசியல் உரிமைகளும் சிவில் சுதந்திரங்களும் தேய்ந்து போய் விட்டன” என்று ஃப்ரீடம் ஹவுஸ் கூறியிருந்தது.

இந்தியாவை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்துகிறார் மோடி – அமெரிக்க மனித உரிமை அமைப்பு அறிக்கை

இந்திய அரசு, அறிக்கையை கடுமையாக எதிர்த்திருந்தது. இந்தியாவில் நன்கு நிலைப்பட்ட ஜனநாயக நடைமுறைகள் உள்ளதாக உறுதியளித்திருந்தது.

பேச்சுரிமை தொடர்பாக ராகுல் காந்தி மோடி அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்