Aran Sei

தலித் மக்களை மனிதர்களாகவே கருதுவதில்லை – ராகுல் காந்தி

credit : wikimedia

“பெரும்பாலான இந்தியர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் மற்றும் பழங்குடியினரை மனிதர்களாகவே கருதுவதில்லை என்பது வெட்கப்படவேண்டிய உண்மை” என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

“உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், அம்மாநில காவல் துறையும் ஹத்ராசில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை மறுக்கின்றனர். வெட்கப்படவேண்டிய உண்மை என்னவென்றால்  ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் மற்றும் பழங்குடியினரை பெரும்பாலான இந்தியர்கள் மனிதர்களாகவே கருதுவதில்லை” என்று ட்விட்டரில் ஒரு செய்தி பதிவுக்கு பதிலளிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

“முதல்வரும், காவல் துறையும் ஹத்ராசில் யாரும் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று கூறுகின்றனர். ஏனெனில், அவர்களுக்கும், பெரும்பாலான இந்தியர்களுக்கும் பாதிக்கப்பட்ட பெண் மனிதரே இல்லை” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்