பஜ்ரங் தளம் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவுகள் குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் முரண்பாடான தகவல்களை கூறிவருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பஜ்ரங் தள உறுப்பினர்கள் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவுகள் குறித்து பேஸ்புக் நிறுவனம் இந்திய நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் பொய் சொல்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் .
“பேஸ்புக் அமெரிக்க பஜ்ரங் தளத்தின் பதிவுகள் ஆபத்தானது மற்றும் தடை செய்யப்பட வேண்டியது என்று கூறுகிறது. ஆனால், பேஸ்புக் இந்தியா நம் நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் பஜ்ரங் தளம் பதிவுகள் ஆபத்தானது அல்ல என்று கூறுகிறது.
நேற்று (டிசம்பர் 17), இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார். அதில், இரண்டு செய்தி துணுக்குகளை மேற்கோள்காட்டி, பஜ்ரங் தளத்தில் ஃபேஸ்புக் பதிவுகள் குறித்து அந்த நிறுவனம் முரண்பாடான தகவல்களை கூறிவருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
“பேஸ்புக் அமெரிக்க பஜ்ரங் தளத்தின் பதிவுகள் ஆபத்தானது மற்றும் தடை செய்யப்பட வேண்டியது என்று கூறுகிறது. ஆனால், பேஸ்புக் இந்தியா நம் நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் பஜ்ரங் தளம் பதிவுகள் ஆபத்தானது அல்ல என்று கூறுகிறது. பேஸ்புக் நிறுவனம் இந்தியாவிடமும் நம் நாடாளுமன்றத்திடமும் பொய் சொல்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Facebook US says Bajrang Dal content is offensive and should be banned.
Facebook India tells our Parliamentary panel that Bajrang Dal content is not offensive.
Is Facebook lying to India and its Parliament? pic.twitter.com/nx0FrZQfOY
— Rahul Gandhi (@RahulGandhi) December 17, 2020
“கிறிஸ்துமஸ் அன்று தேவாலயம் செல்லும் இந்துக்களை தாக்குவோம்” – பஜ்ரங் தளம் எச்சரிக்கை
இந்த ட்வீட்டுடன், பஜ்ரங் தளத்தின் பதிவுகள் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறுவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்திதாளின் சுட்டிக்கப்பட்ட செய்தியின் துணுக்கை இணைத்துள்ளார்.
மேலும், ஃபேஸ்புக் தலைவர் அஜித் மோகன் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம், ஃபேஸ்புக்கின் உண்மை அறியும் குழுவின் ஆய்வில் பஜ்ரங் தளத்தின் பதிவுகள் எதுவும் ஃபேஸ்புக்கின் சமூக வலைதள விதிமுறைகளுக்கு எதிராக இல்லை என்று பதிலளித்துள்ள செய்தி துணுக்கையும் இணைத்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.