Aran Sei

’10 நாட்களில் கொரோனா தடுப்பூசி புதுச்சேரி வரும்’ – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

கொரோனா தடுப்பூசி பத்து நாட்களுக்குள் வர உள்ளதாகவும், ஊசி போடப் புதுவையின் நான்கு பிராந்தியங்களிலும் 41 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, நேற்று (ஜனவரி 4) அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ”கொரோனா தடுப்பூசி வந்ததும் புதுச்சேரியில் நோயாளிகளுக்குச் செலுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.  கொரோனா தடுப்பூசிகளைப் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

ஒத்திகை தடுப்பூசி முகாம்கள் என்றால் என்ன? – இதை நடத்த காரணம் என்ன?

புதுச்சேரியில் 36 இடங்கள், காரைக்காலில் 15 இடங்கள், மாஹேவில் 3 இடங்கள், ஏனாமில் ஒரு இடம் என்று மொத்தம் 55 இடங்களில் மருந்துகளைத் தயார் நிலையில், தேவையான குளிர்சாதன வசதியுடன் பாதுகாக்கப்படும் என்று நாராயணசாமி உறுதியளித்துள்ளார்.

மேலும், “புதுச்சேரியில் முதற்கட்டமாக மருத்துவக் களப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய சுகாதாரத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி 14 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போடப்படும். ஊசி போடும் மையங்கள் புதுச்சேரியில் 29 இடங்கள், காரைக்காலில் 8 இடங்கள், மாஹேவில் 3 இடங்கள், ஏனாமில் ஒரு இடம் என 41 இடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. முதல்கட்ட ஊசி போடும் பணி ஒரு வாரத்துக்குள் நிறைவடையும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கொராவுக்கு எதிரான நடவடிக்கை – தடுப்பூசியை அனுமதித்தது பஹ்ரைன்

இரண்டாவது கட்டமாக, களப்பணியில் ஈடுபடும் காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், பொதுப்பணித் துறைப் பணியாளர்கள், துப்புரவுத் துறைப் பணியாளர்கள் ஆகியோருக்குக் தடுப்பூசி போடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகள் பத்து நாட்களுக்குள் வரவுள்ளன. மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, இலவசமாகத் தடுப்பூசியைப் புதுச்சேரிக்குத் தருவதாகத் தெரிவித்துள்ளதாக நாராயணசாமி கூறியுள்ளார்.

குறைந்த, நடுத்தர வருமான நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி – மருந்து நிறுவனங்கள் நம்பிக்கை

“அதை வாங்கி மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, கொரோனா பாதிப்புள்ளோருக்குச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இல்லையென்றால் மாநில அரசு நிதியில் இருந்து செய்யத் தயாராக இருக்கிறோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்