மாட்டுச் சாணம் சிப் கைபேசியின் கதிர்வீச்சைக் குறைக்கும் என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரம் வேண்டும் என 600-க்கும் மேற்பட்ட அறிவியல் அறிஞர்கள், ராஷ்டிரிய காமதேனு ஆயோக் அமைப்பின் தலைவர் வல்லபாய் கத்திரியாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள்.
ஆய்வுகள் எங்கு, எப்போது, யாரால் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்தும், ஆய்வு முடிவுகள் எங்கு வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.
ஆய்வின் தரவுகளையும், ஆய்வின் செயல்பாட்டு முறை குறித்தும் விளக்கம் அளிக்க முடியுமா என்றும் அறிவியல் அறிஞர்கள் கேட்டுள்ளார்கள்.
பசுக்களைப் பேணுவதில் மற்றும் மாட்டுச் சாணப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் ஈடுபட்டுள்ள அமைப்பான ராஷ்டிரிய காமதேனு ஆயோகின் தலைவர் வல்லபாய் கத்திரியா, அக்டோபர் 12-ம் தேதி மாட்டுச்சாணத்தால் ஆன செல்போன் சிப்புகளை வெளியிட்டிருந்தார்.
#WATCH: Cow dung will protect everyone, it is anti-radiation… It's scientifically proven…This is a radiation chip that can be used in mobile phones to reduce radiation. It'll be safeguard against diseases: Rashtriya Kamdhenu Aayog Chairman Vallabhbhai Kathiria (12.10.2020) pic.twitter.com/bgr9WZPUxK
— ANI (@ANI) October 13, 2020
கைபேசிகளிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சைக் இந்த சிப் குறைக்கும் என்றும், நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள உதவும் எனவும் கூறியதோடு, இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மாட்டுச்சாணம் எல்லோரையும் காக்கும். வீட்டில் மாட்டுச்சாணத்தை வைப்பதன் மூலம் கதிர்வீச்சிலிருந்து நம்மைப் பாதுகாக்க முடியும்.” என்று வல்லபாய் கத்திரியா கூறியிருந்தார்.
மத்திய அரசில் மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் பசுக்களைக் காப்பதற்காக 2019 ல் அமைக்கப்பட்டது ராஷ்ட்ரீய காமதேனு ஆயோக் ஆகும்.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “சிப்புனா அது மின்னணு சாதனம்…. அப்படி ஏதும் சாணில இல்லை…! 80 % தண்ணீர் 3:2:1 என்ற விகிதத்தில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் இருக்கிறது.
கதிர்வீச்சைத் தடுக்கணும்னா சாணில காரீயமோ, டின்னோ, ஆண்டிமனி அல்லது டங்ஸ்டன், பிஸ்மத் அல்லது ஏதாவது ஒரு கடின உலோகமாவது இருக்கணும். அப்படி சாணியில் ஒண்ணுமே கிடையாது.” என்று கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.