Aran Sei

போராடும் விவசாயிகளின் பாரத் பந்த்: ஆதரவு தெரிவித்து தென்னிந்தியா முழுவதும் மாநில கட்சிகள் ஆர்ப்பாட்டம்

ன்றிய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் விவசாயிகளின் போராட்டம் 300 நாட்களை எட்டியதை அடுத்து, போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா நாடு முழுவதும் பொது வேலை முடக்கத்தை அறிவித்தது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை தவிர்த்து, பெரும்பாலான எதிர்கட்சிகளும் மாநில கட்சிகளும் இந்த பாரத் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். மேலும், தொழிற்சங்கத்தினரும் பலதரப்பட்ட அமைப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 27) காலை 6 மணியளவில் விவசாயிகளின் போராட்டம் தொடங்கியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்  பர்னாலா ரயில்நிலையத்தில் ரயில் தண்டவாளங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக  உத்தரபிரதேசத்தில் இருந்து காசிப்பூர் செல்லும் சாலை  மூடப்பட்டுள்ளதாக டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் முழுஅடைப்புப் போராட்டம் – டெல்லியில் சாலை,ரயில் போக்குவரத்து முடக்கம்

தமிழ்நாடு, சத்தீஸ்கர், கேரளா, பஞ்சாப், ஜார்க்கண்ட் மற்றும் ஆந்திரா ஆகிய மாநில அரசுகள் இந்த பந்த் தங்கள் ஆதரவை வழங்கியிருந்தன. இம்மாநிலங்களில் பாரத் பந்த்தின் விளைவு காணப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் இடதுசாரி கட்சிகள் விஜயவாடா பேருந்து நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இப்போராட்டம் குறித்து பேசியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி.மது, “விவசாய சட்டங்களுக்கு எதிராக கடந்த 10 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிரான தேசிய போராட்டம்.” என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் கலபுரகி நகரில் உள்ள மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பல்வேறு அமைப்புகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் முழுஅடைப்புப் போராட்டம் – காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில்  சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளன. கடைகளும் மூடப்பட்டுள்ளன. காரணம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகளின் கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் பாரத் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

தமிழ்நாட்டிலும் தலைநகர் சென்னை உட்பட பல்வேறு நகரங்களின் விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

Source: ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்