Aran Sei

கேட்பது யாசகம் அல்ல; எங்கள் வாழ்வுக்கான உரிமை – போராடும் விவசாயிகள்

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விசாய திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தின்   காரணமாக  முக்கிய சாலைகளில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து தடையால், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு கைக்கூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்ளவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தில்லி எல்லையில்போராட்டம் நடத்தி சன்யுக்ட் விவசாயிகள் பேரணி என்ற அமைப்பு,  ஹரியானா-ராஜஸ்தான் எல்லைகளுக்கு அருகிலுள்ள ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலையில் செல்லும் பயணிகளுக்கு இந்தியில் துண்டுப்பிரசுரங்களை  விநியோகம் செய்துள்ளது.

” பொதுக் கருத்தை மாற்ற நாடகமாடுகிறது அரசு ” – போராட்டத்தை தீவிரப்படுத்தும் விவசாயிகள்

“சாலைகளைத் தடுப்பதும், பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதும் எங்கள் நோக்கம் அல்ல. நாங்கள் இங்கே ஒரு கட்டாயத்தின் காரணமாகவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆனாலும், எங்கள் போராட்டம் உங்களுக்கு ஏதேனும் சிரமத்தை ஏற்படுத்தியிருந்தால், கைகளை கூப்பி மன்னிப்பு கேட்கிறோம்.”  என்று அந்த துண்டுப்பிரசுரங்களில் கூறப்பட்டுள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

தடுப்புகள் உருவாக்கப்பட்டுள்ள சாலைகளில் சிக்கித் தவிக்கும் வயதான நபர்களும், நோயாளிகளும் அல்லது ஆம்புலன்சும், அங்கே உள்ள தன்னார்வலர்களைத் தொடர்பு கொள்ளலாம்.  அவர்கள் உடனடியாக உங்களுக்கு உதவிக்கு வந்து, பாதையை ஏற்படுத்தி தருவார்கள் என்று துண்டுப்பிரசுரங்களில் அச்சடிக்கப்பட்டிருந்தது.

போராடும் விவசாயிகள் மத்தியில் ஒரு நாள் – வீடியோ

”நாங்கள் எந்தவொரு  யாசகத்தையும் கேட்கவில்லை, எங்களின் பயிர்களுக்கு நியாயமான விலையைத்தான் கேட்கிறோம். இந்தக் கோரிக்கையுடன்தான் நாங்கள் தில்லிக்குள் நுழைய விரும்புகிறோம். எங்கள் கோரிக்கையைப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்க உள்ளோம்.” என்று துண்டுப்பிரசுரங்களில் விவசாயிகள் கூறியுள்ளனர்.

மேலும், “விவசாயிகளான எங்களை, மக்கள் அனந்தாட்டா (உணவு வழங்குநர்கள்) என்றும் அழைக்கிறார்கள். நாட்டின் பிரதமர் இந்த மூன்று சட்டங்களின் மூலம் ஒரு வரலாற்று பரிசை எங்களுக்குக் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார். ஆனால், இது பரிசு அல்ல, தண்டனை என்று நாங்கள் கூறுகிறோம்.” என்று அவர்கள் விமர்த்துள்ளதாக என்டிடிவி குறிப்பிட்டுள்ளது.

வீரம் செறிந்த விவசாயிகள் போராட்டம் – வரலாறு படைக்கும் பெண்கள்

“தயவுசெய்து உங்கள் பரிசை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு பரிசை வழங்க விரும்பினால், எங்கள் பயிர்களுக்கான நியாயமான விலைக்குச் சட்டப்பூர்வ உத்தரவாதம் தாருங்கள்.” என்று அதில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்