Aran Sei

மத்திய அரசோடு பேச்சுவார்த்தைக்குத் தயார் : நான்கு அம்ச கோரிக்கையை முன்மொழியும் விவசாய சங்கங்கள்

பேச்சுவார்த்தைக்கான மத்திய அரசின் அழைப்பை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கங்களின் கூட்டு முன்னணியான சம்யுக்ட் விவசாயிகள் மோர்ச்சா ஏற்றுக்கொண்டு, டிசம்பர் 29 ஆம் தேதி பேச்சு வார்த்தைக்கு வர சம்மதித்துள்ளது.

பேச்சுவார்த்தையின் போது, நான்கு அம்ச கோரிக்கையை முன்வைக்கவுள்ளனர். அதில், மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்,  குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதத்தை ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் முக்கியமானவை.

“பேச்சுவார்த்தையை அமித்ஷா திசை திருப்பினார்” – போராடும் விவசாயிகள் குற்றச்சாட்டு

நேற்று (டிசம்பர் 26) ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர் யோகேந்திர யாதவ், பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது,  சம்யுக்ட் விவசாயிகள் மோர்ச்சாவில் உள்ள விவசாயிகள் சங்க தலைவர்கள், வரும்  டிசம்பர் 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், பேச்சுவார்த்தையில் நான்கு அம்ச கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக அவர்  கூறியுள்ள்ளார் என்று தி இந்து தெரிவித்துள்ளது.

விவசாய சட்டங்கள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை போன்ற பிரச்சனைகள் தவிர, ’தேசிய தலைநகர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கான காற்றின் தர நிர்ணய ஆணையம், 2020’-ன் சட்டங்களில் இருந்து விவசாயிகளுக்கு விலக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும்விதமாக மின்சாரம் திருத்த மசோதா,2020-ல் திருத்தம் செய்ய வேண்டியும் கோரிக்கை வைக்க உள்ளனர் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் – ” பேச்சுவார்த்தை தொடர்பாக அரசு உண்மைகளை திரிக்கிறது”

“இந்த நான்கு கோரிக்கைகளும் பேச்சுவார்த்தையில் முன்வைக்க நாங்கள் விரும்புகிறோம். இதன் வழியாக மூன்று சட்டங்களை ரத்து செய்வதற்கான எங்கள் முடிவை விவாதத்திற்குள் கொண்டுவர வேண்டும். ஒரு நேர்மையான பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் சங்கங்கள் எப்போது தயாராக உள்ளது.” என்று  யோகேந்திர யாதவ் தெளிவுப்படுத்தியுள்ளார்.

விவசாயிகள் சங்கங்களின் இந்த முன்மொழிவு மத்திய அரசின் டிசம்பர் 24 ஆம் தேதியிட்ட கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் உள்ளது.

சில சங்கங்களிடம் மட்டும் பேச்சுவார்த்தை – விவசாயிகள் ஒற்றுமையை குலைக்க திட்டம்

விவசாயத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விவேக் அகர்வாலுக்கு விவசாயிகள் சங்கங்கள் எழுதிய இக்கடிதத்தில், முந்தைய கூட்டங்களில் பேச்சுவார்த்தைகள் குறித்த உண்மைகளை மறைப்பதன் வழியாக மத்திய அரசு, தொடர்ந்து மக்களை தவறாக வழிநடத்தி வருகிறது என்று குற்றஞ்சாட்டியதாக தி இந்து தெரிவித்துள்ளது.

“மூன்று விவசாய சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரி வருகிறோம். ஆனால், இந்தச் சட்டங்களில் திருத்தங்களை நாங்கள் கேட்பது போல் அரசு பேசி வருகிறது. உங்கள் கடிதத்தில் நீங்கள் விவசாயிகளை மரியாதையுடன் நடத்துவதாக சொல்வதில் உண்மையிருந்தால், முந்தைய பேச்சுவார்த்தைகளைப் குறித்து நீங்கள் தவறான தகவல்களைப் பரப்புவதில் ஈடுபடக்கூடாது. விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தவும், அவதூறு செய்யவும், அரசு தன் முழு இயந்திரங்களையும் முடுக்கிவிட்டுள்ளது. இந்தப் பொய் பிரச்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.” என்று கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்