Aran Sei

உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்பது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அரசின் கருத்து- பிரியங்கா காந்தி

த்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று கூறிய யோகி ஆதித்யா நாத்தின் கருத்தை “மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அரசின் கருத்து” என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

‘உபியில் 281 சதவீதம் அதிகரித்துள்ள கொரோனா; சடலங்களை எரியூட்ட விறகின்றி தவிக்கும் மக்கள்’ – பிரியங்கா காந்தி

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்த நெருக்கடி நிலையின்போது பொதுவெளியில் பொய் சொல்வதற்கு என்ன தண்டனை? ஆக்சிஜன் குறைவாக உள்ள நோயாளிகளின் நிலையை எடுத்துக்கொள்ளுங்கள். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று கூறும் நோயாளிகளின் நிலையில் உங்களை பொருத்திப்பார்க்க முயலுங்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அரசே இவ்வாறு தெரிவிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “உத்தரபிரதேச முதலமைச்சரே , உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் ஆக்ஸிஜன் அவசரநிலை நிலவுகிறது. நீங்கள் என் மீது வழக்கு பதிந்து கொள்ளுங்கள், சொத்தைப் பறிமுதல் செய்து கொள்ளுங்கள். ஆனால் கடவுளின் பொருட்டு, சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக மக்களின் உயிரைக் காப்பாற்றும் பணியில் ஈடுபடுங்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவவில்லை என்றும், அவ்வாறு வதந்தி பரப்புவோர்கள் மீது வழக்குப் பதியப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்