Aran Sei

பாரம்பரிய ஊடகங்களுக்கு இணையாக டிஜிட்டல் ஊடக உள்ளடக்கம் இருக்க வேண்டும் – பிரகாஷ் ஜவடேகர்

பிரகாஷ் ஜாவ்டேகர் - Image Credit : thewire.in

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள், டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்களுக்கு சில பொறுப்புகளை வழங்கியுள்ளதாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே, தைனிக் பாஸ்கர், ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, ஏபிபி, ஈநாடு, தைனிக் ஜாக்ரன் மற்றும் லோக்மாத் உள்ளிட்ட டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்க (டிஎன்பிஏ)  பிரதிநிதிகளுடன் காணொளி காட்சிமூலம்  தகவல் தொழில்நுட்ப (இடைத்தரகர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறை) விதிகள் 2021 வெளியிடப்பட்ட பின்னணியில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.

“ஓடிடி தளங்களுடனான சந்திப்பை தொடர்ந்து, டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கத்துடன் இன்று (மார்ச் 11) கலந்துரையாடல் நடைபெற்றது. டிஜிட்டல் ஊடகங்களுக்கான  புதிய விதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  அவர்கள் புதிய விதிகளை வரவேற்றதோடு சில ஆலோசனைகளை வழங்கினர்” என பிரகாஷ் ஜவடேகர் ட்வீட் செய்துள்ளார்.

கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் பேசிய ஜவடேகர், புதிய விதிகள், டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்களுக்குச் சில பொறுப்புகளைக் அளித்திருக்கிறது என தெரிவித்தார்.

”இந்திய பத்திரிகை கவுன்சில் மற்றும் கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பத்திரிகை நடத்தை விதிமுறைகள் போன்ற நெறிமுறைககளை பின்பற்றுதல் இதில் அடங்கும்.” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயனீட்டாளர்களின் குறைகளைத் தீர்க்க, மூன்று அடுக்கு குறைதீர்ப்பு முறையை இந்த விதிகள் வழங்குகின்றன. அதில் முதல் மற்றும் இரண்டாவது அடுக்கு டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் மற்றும் அவர்களால் உருவாக்கப்பட்ட சுய ஒழுங்குமுறை அமைப்புகளாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்க மறுக்கும் லைவ்லா – மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கேரளா நீதிமன்றம் தடை

புதிய விதிகளின்படி, டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள், அமைச்சகத்திற்கு எளிய வடிவில் சில அடிப்படை தகவல்களை அளிக்க வேண்டும், அந்த வடிவம் இறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், அவர்கள் எடுக்கும் குறைதீர்ப்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்களை பொது வெளியில் வைக்க வேண்டும். அச்சு ஊடகங்களும் தொலைக்காட்சி சேனல்களும் டிஜிட்டல் தளங்களில் செயல்படுகின்றன. அங்கு உள்ளடக்கம் கிட்டத்தட்ட பாரம்பரிய தளங்களில் உள்ளது போல் உள்ளது.

“எனினும், டிஜிட்டல் ஊடகங்களில் மட்டும் உருவாக்கப்படும் உள்ளடக்கங்கள் உள்ளன. இது தவிர, டிஜிட்டல் ஊடகத்தில் மட்டுமே இயங்கும் பல நிறுவனங்கள் உள்ளன. அதன்படி, டிஜிட்டல் ஊடகத்தில்  உள்ள செய்திகளை, பாரம்பரிய ஊடகங்களுக்கு இணையாக கொண்டு வர, இந்த விதிகள் முயற்சிக்கின்றன,” என ஜவடேகர் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்ப விதிகளுக்கு எதிரான மனு – மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

பங்கேற்பாளர்கள் கருத்துக்கள் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்த ஜவடேகர், இந்த ஆலோசனை செயல்முறையை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு, ஊடகத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான செயல்முறையைத் தொடரும் என கூறினார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்