Aran Sei

ரேஷன் பொருட்கள் கிடைக்காத ஏழைகள் : அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வு

Image Credits: The Hans India

பொது விநியோக முறையில் ரேஷன் கிடைப்பதற்கும், ஊட்டச்சத்து குறைபாட்டின் பரவலுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த முதல் ஆய்வு, இலவச உணவு தானியங்கள் தேவைப்படும் ஏழைக் குடும்பங்கள், பெரும்பாலும் இத்திட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவதைக் கண்டறிந்துள்ளது.

இந்த ஆய்வுக் கட்டுரையை மும்பையில் உள்ள சர்வதேச மக்கள் தொகை அறிவியல் கழகத்தைச் சேர்ந்த பசந்த் கே.பாண்டா, சஞ்சய் கே.மொஹந்தி, இதிஸ்ரீ நாயக், விஷால் தேவ் சாஸ்திரி மற்றும் பாஸ்டனில் உள்ள டி.எச்.சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தைச் சேர்ந்த எஸ்.வி.சுப்பிரமணியன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

‘இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வறுமை: பொது விநியோக முறையின் பயன்பாடு முக்கியமா?’ (Malnutrition and poverty in India: does the use of public distribution system matter?) என்ற தலைப்பில், இந்த ஆய்வு கடந்த வாரம் பயோமெட் சென்ட்ரலின் நியூட்ரிஷன் இதழில் வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வு தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு – 4-ன் தரவுகளைப் பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம் உணவு ரேஷன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைப் பெறப் பயன்படும் பிபிஎல் (வறுமைக் கோட்டுக்குக் கீழே) அட்டைகளின் சீரற்ற விநியோகத்தைக் கண்டறிந்துள்ளது.

ஆய்வின்படி, மதிப்பிடப்பட்ட 15% குடும்பங்கள் ‘உண்மையான ஏழைகள்’ (பொருளாதார ரீதியாக ஏழைகள் மற்றும் நலத்திட்ட அட்டைகளைக் கொண்டவர்கள்) என வகைப்படுத்தப்பட்டுள்ளன; 16% ‘விலக்கப்பட்ட ஏழைகள்’ (பொருளாதார ரீதியாக ஏழைகள், ஆனால் பிபிஎல் அட்டை இல்லாதவர்கள்); 23% சலுகை பெற்ற ‘ஏழை அல்லாதவர்கள்’ (பொருளாதார ரீதியாக ஏழை அல்லாதவர்கள் ஆனால் நலத்திட்ட அட்டைகளைக் கொண்டவர்கள்); மற்றும் 46% ‘ஏழை அல்லாதவர்கள்’ (நலத்திட்ட அட்டைகள் இல்லாத பொருளாதார ரீதியாக ஏழை அல்லாதவர்கள்).

மொத்தத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் ஆதாயம் அடையும் மற்றும் இந்தத் திட்டத்தால் அதையும் அடையாத 57% ஏழைக் குடும்பங்களில் குறைந்தது ஒரு வளர்ச்சி குன்றிய குழந்தையாவது உள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் ஆதாயம் அடையும் ஏழை அல்லாத குடும்பங்களில் 43%-ல் குறைந்தது ஒரு குன்றிய குழந்தையும், பொது விநியோகத் திட்டத்தால் அதையும் அடையாத ஏழை அல்லாத குடும்பங்களில் 36%-ல் குறைந்தது ஒரு வளர்ச்சி குன்றிய குழந்தையும் உள்ளது.

பொது விநியோகத் திட்டத்தில் உள்ள ஏழை வீடுகளைச் சேர்ந்த குழந்தைகளில் 48%; பொது விநியோகத் திட்டத்தில் இல்லாத ஏழை வீடுகளில் இருந்து 47%; பொது விநியோகத் திட்டத்தில் கொண்ட ஏழை அல்லாத வீடுகளில் இருந்து 35%; மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் இல்லாத ஏழை அல்லாத குடும்பங்களில் இருந்து 29% குழந்தைகள் எடை குறைந்தவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

“குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பு பொது விநியோகத் திட்டத்தின் நோக்கத்தில் இல்லை. அதன் தாக்கத்தைப் புரிந்துகொள்ள நாங்கள் ஆராய்ந்தோம், கலவையான முடிவுகளைக் கண்டோம். பொது விநியோகத் திட்ட அட்டைகள் பெரும்பாலும் ஏழை மக்களுக்கு வழங்கப்படுவதால், இந்த உண்மையான ஏழைகளிடையே அதிக குறைபாடும் எடை குறைவும் [நபர்கள்] இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுவதற்கில்லை,” என்று ‘தி இந்துவுக்கு’ அளித்த பெட்டியில் பசந்த் குமார் பாண்டா கூறியுள்ளார்.

உண்மையான ஏழைகள் மற்றும் விலக்கப்பட்ட ஏழைக் குடும்பக் குழந்தைகளிடையே குறைபாடுகள் மற்றும் எடை குறைவுகள் இருப்பதில் எந்த வித்தியாசமும் இல்லை. அதே நேரத்தில் விலக்கப்பட்ட ஏழைகள் மானிய சலுகைகளை இழக்கின்றனர். இதனால், விலக்கப்பட்ட ஏழைகளை பாதுகாப்பு வலைஅமைப்புக்குள் சேர்க்க வேண்டும். மூன்றாவதாக, பொது விநியோகத் திட்டத்தின் மாநில வடிவங்கள் கலவையாக உள்ளன. பல மாநிலங்களில், விலக்கப்பட்ட ஏழைகளிடையே குறைபாடுகள் உண்மையான ஏழைகளை விட அதிகமாக உள்ளன,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொது விநியோகத் திட்ட அட்டைகளின் விநியோகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் சொத்து இழப்பு ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. ஆய்வின்படி: “பொருளாதார ரீதியாக ஏழை மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் ‘சொத்து இழப்பு மற்றும் நலத்திட்ட அட்டை’ அதிக விகிதத்தில் இருந்தபோதிலும், ‘சொத்து இல்லாத ஏழைகளிடையே நலத்திட்ட அட்டை’ விலக்கப்படுவதும் அதிகமாக நடைபெறுகிறது.

உதாரணமாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில், சுமார் 27% குடும்பங்கள் சொத்து இழந்தவர்கள், ஆனால் அவர்களுக்கு நலத்திட்ட அட்டைகள் இல்லை, இது பீகாரில் 15% ஆகவும் ஜார்க்கண்டில் 21% ஆகவும் உள்ளது. இதேபோன்று, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில், ஏழை அல்லாத குடும்பங்கள் பெரும் பங்கு நலத்திட்ட அட்டைகளைக் கொண்டிருந்தது.”

நலத்திட்டங்கள் தேவைப்படும் மிக ஏழ்மையான குடும்பங்களுக்கு அவை வழங்கப்படுவதில்லை என்பதை இந்த ஆய்வு முடிவுகள் தெரியப்படுத்துகின்றன. ஏழை வீடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதையும், உணவுக்கான பொது விநியோகத்தை உறுதி செய்வதற்காக நலத் திட்டங்களில் சேர்க்கப்படுவதையும் உறுதிப்படுத்த இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சத்தான உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியத்தையும், ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைக்க உதவும் உணவு விநியோகத்தை அகலப்படுத்துவதையும் இது கோருகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்