Aran Sei

“அரசியல்வாதிகள்தான் மதத்தை முன்னிலைப்படுத்துகிறார்கள்” – அனுமன் கோயிலுக்கு இடம் வழங்கிய இஸ்லாமியர்

கர்நாடகாவைச் சேர்ந்த இஸ்லாமிய நபர் அனுமன் கோயிலைப் புதுப்பிப்பதற்காக ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி மதிப்புள்ள  நிலத்தைக் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் என தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.

கறுப்புச் சட்டத்தில் நடக்கும் வேட்டை – லவ் ஜிகாத் என்ற பெயரில் 7 பேர் கைது

கர்நாடகாவின் கிராமப்புறப் பகுதியான ஹோசகோடே தாலுகாவிலுள்ள வலகேரேபுராவில் ஹெச்.எம்.ஜி.பாஷா எனும் நபர் தனது குடும்பத்திற்குச் சொந்தமான (1089 சதுர அடிகள்) நிலத்தைக் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த இடம் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது. ஹெச்.எம்.ஜி.பாஷா லாரிகளில் சரக்குகளை வைத்துப் போக்குவரத்து வணிகத்தை நடத்தி வருகிறார்.

உபி : லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தின் கீழ் முதல் கைது

”கோயில் சிறியதாக இருப்பதால் பிரார்த்தனை செய்யும் போது பலர் கஷ்டபடுவதை நான் பார்த்தேன். ஆகவே, எனது நிலத்தின் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்க முடிவு செய்தேன். எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு ஒப்புக்கொண்டனர். இது சமுதாயத்திற்கு உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று பாஷா கூறியதாக ஏஎன்ஐ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாஷா கோயிலுக்கு அளித்துள்ள நன்கொடை குறித்து அந்தக் கோயிலின் அறங்காவலர் பைரே கவுடா “எச்.எம்.ஜி பாஷா முழு மனதுடன் கோயில் கட்டுமானத்திற்காக நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கோயில் கட்டுவதற்காக இவ்வளவு நிலங்களை நன்கொடையாக வழங்கியது பாஷாவின் பெருந்தன்மை” என கவுடா கூறியுள்ளார்.

கோயிலுக்கு முன்னால் இருந்த நிலத்தை நன்கொடையாக வழங்கிய முடிவைப் பாராட்டும் வகையில் சாலையில் வைக்கப்பட்டுள்ள சுவரொட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

credits : the news minute
credits : the news minute

”மக்கள் இந்து முஸ்லிம் என்று வேறுபாடுகளை பார்ப்பத்திலை என்று நான் நினைக்கிறேன், அனைவரையும் ஒன்றாகவே மக்கள் கருதுகிறார்கள். ஆனால், அரசியல் தலைவர்கள், தங்களுடைய  சொந்த நலனுக்காக,  மக்களிடையே மதத்தை முன்னிலைப்படுத்துகிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார் என தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.

`லவ் ஜிகாத் தடைச் சட்டம் நீதியை மீறும் செயல்’ – முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி

“நாட்டின் தற்போதைய சூழலில், இளைய சமுதாயம் இனவாதக் கருத்துகளையே அதிகம் சிந்திக்கிறது. ‘லவ் ஜிஹாத், பசுவதை என என்னென்ன வார்த்தைகளையோ நாம் கேள்விப்படுகிறோம். இப்படி இருந்தால் நாடு முன்னேறுமா? நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். நம் தேசத்தின் மீது அன்பு வைத்திருக்க வேண்டும் என பாஷா தெரிவித்துள்ளாக நியூஸ் மினிட் செய்தி இணையதளம் பதிவிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்