Aran Sei

2 வயது குழந்தைக்கு சிகரெட்டால் சித்திரவதை – கான்ஸ்டபிள் கைது

ரண்டு வயது பெண் குழந்தைக்கு சிகரெட்டால் சூடுவைத்து சித்திரவதை செய்த காவலரை சத்தீஸ்கர் காவல்துறை கைது செய்துள்ளார்.

கடந்த அக்டோபர் 29-ம் தேதி, பாலோட் மாவட்டத்தில், சத்தீஸ்கர் காவல்துறையில் கான்ஸ்டபிளாக உள்ள அவினாஷ் ராய் என்பவர் இந்த குற்றத்தை செய்ததாக ‘என்டிடிவி’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 29-ம் தேதி  மாலை, பாதிக்கப்பட்ட குழந்தையின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருக்கும் அவினாஷ் போதையில் வீட்டிற்கு வந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் (வீட்டு உரிமையாளர்) ஊரடங்கின் போது, அவரிடமிருந்து கடன் வாங்கியிருந்தார்.  அதை திருப்பிக் கேட்டப்பொழுது, அவரால் கொடுக்க முடியவில்லை என்று ‘என்டிடிவி’ தெரிவித்துள்ளது.

அதன் பின், அவினாஷ்   அந்தப் பெண்ணின் “இரண்டு வயது குழந்தையிடம் தன்னை ‘அப்பா’ என்று அழைக்கும்படி கேட்டிருக்கிறார். குழந்தை அதற்கு மறுத்திருக்கிறது. கோபமடைந்த அவர், குழந்தையை ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளார்.  மேலும் எரிந்த சிகரெட்டால், குழந்தையின் உடலில் தீக்காயங்களை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. குழந்தையின் முகம், கைகள், முதுகு, வயிறு மற்றும் தொடைகளில் தீக்காயங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வலி தாங்க முடியாமல், அக்குழந்தை அழுதபடியே, தன் தாயை கூப்பிட்ட போது, ​​அவினாஷ் கதவைத் திறந்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பின்பு, குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, இப்போது நன்றாக இருப்பதாக ’தி வயர்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து, குற்றம் நடந்த மறுநாளான  அக்டோபர் 30-ம் தேதி, குழந்தையின் தாய் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, அவினாஷ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ’தி வயர்’ குறிப்பிட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு தான், அவினாஷ் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் , புகார் கொடுக்கப்பட்ட அன்றே (அக்டோபர் 30 ) அபிலாஷை  கைது செய்துவிட்டதாகவும் அக்டோபர் 31-ம் தேதி அவரை பணியிலிருந்து நீக்கி விட்டதாகவும் மூத்த காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர் என்று ‘தி வயர்’ இணையதளம் தெரிவிக்கிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்