Aran Sei

உத்தரப் பிரதேசம்: இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வேன் என்று பேசிய சாமியார்மீது வழக்கு பதிவு

“உங்கள் பெண்களை வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்து பாலியல் வன்கொடுமை செய்வேன்” என பேசிய உத்தரப் பிரதேச சாமியார்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் கைராபாத் நகரத்தில் நவராத்திரி விழாவையொட்டி ஊர்வலம் செல்லும் போது மசூதிக்கு முன்பு உங்கள் பெண்களை வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்து பாலியல் வன்கொடுமை செய்வேன் என்று காவி உடை அணிந்த சாமியார் ஒருவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலானது.

உத்தரபிரதேசம்: ‘உங்கள் சமூக பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன்’ – மசூதிக்கு முன்பு காவி உடை அணிந்த சாமியார் மிரட்டல்

இச்சம்பவம் குறித்து பேசியுள்ள சீதாபூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் தீட்சித், “கைராபாத்தில் வெறுப்பை பரப்பும் வகையில் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்ட மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதாரங்களை சேகரித்து விசாரணை செய்த பிறகு, காவல்துறை அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

வெறுப்பைப் பரப்பும் பேச்சு மற்றும் தரக்குறைவான கருத்துகளை வெளியிட்டது தொடர்பான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா: இஸ்லாமிய மாம்பழ வியாபாரிகளைக் குறிவைக்கும் இந்துத்துவ வலதுசாரி அமைப்பினர்

நேற்று (ஏப்ரல் 8), மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களில், அவர் பேசும் ஒரு காணொளி இணையத்தில் வெளியானது. அக்காணொளியில், “நான் தவறாக பேசிவிட்டேன். என் பேச்சுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் பேசியுள்ளார்.

Source: PTI

இந்தி எதிர்ப்பு போர்: தமிழ்நாட்டின் பெருமை

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்