பீகாரில் ரூ 14,258 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் கலந்து கொண்டார்.
காணொலி வாயிலாக நிகழ்வில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் தொடர்பான மசோதாக்கள் குறித்தும் கருத்து தெரிவித்தார்.
பிரதமர் மோடி கூறுகையில், ”வேளாண் தொடர்பான இரண்டு மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு என் வாழ்த்துக்கள். இந்த சட்டத்திருத்தங்கள் விவசாயிகளின் உடனடி தேவையாக இருக்கிறது. இந்த மசோதாக்கள் விவசாய மண்டிகளுக்கு எதிரானவை அல்ல என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன். விவசாயிகளின் நலனுக்காகவே நமது அரசு இந்த சீர்திருத்தங்களை கொண்டுவந்துள்ளது.” என்று கூறினார்.
#WATCH Yesterday, two farm bills were passed in Parliament. I congratulate my farmers. This change in farming sector is the need of the present hour & our govt has brought this reform for farmers. I want to make it clear that these Bills is not against agriculture mandis: PM Modi pic.twitter.com/3GrtOYfXUw
— ANI (@ANI) September 21, 2020
”குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பது தொடரும் என்று நாட்டின் விவசாயிகளுக்கு நான் உறுதியளிக்கிறேன். இந்தாண்டு விளைச்சல் காலத்தில் கோதுமை, நெல், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் பயிகளுக்காக குறைந்தபட்ச ஆதரவு தொகையாக விவசாயிகள் ரூ 1.13 லட்சம் கோடி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 30% அதிகம்.” என்றார்.
”கொரோனா தொற்று சமயத்தில் விவசாயிகளிடமிருந்து வராலாறு காணாத அளவில் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.” எனக் கூறியுள்ளார்.
மேலும், ”விவசாயிகள் விளைபொருளை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்ய இந்த மசோதாக்கள் அனுமதிக்கின்றன. இந்த வேளாண் மசோதாக்கள் விளைபொருள் சந்தைக்கு எதிரானவை அல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” எனவும் கூறியுள்ளார்.
”இதுவரை நடைமுறையில் இருந்த விவசாய சட்டங்களால், விளைபொருட்களை விற்பனை செய்வதில் விவசாயிகள் கைகளும் கால்களும் கட்டப்பட்டு இருந்தனர். சட்டத்தின் பேரால், விவசாயிகளின் பலவீனமான சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி பெரும் கும்பல்கள் உருவாக ஆரம்பித்தன. இது எவ்வளவு காலத்துக்கு நீடிக்க முடியும்?” என மோடி கேள்வி எழுப்பினார்.
”இந்த சட்டங்களும், திருத்தங்களும் விவசாய கொள்முதல் சந்தைகளுக்கு எதிரானவை அல்ல. சந்தைகளின் செயல்பாடு முன்போலவே தொடரும். தேசிய ஜனநாயக கூட்டணி இந்த சந்தைகளை நவீனப்படுத்துவதற்காக தொடர்ந்து உழைத்திருக்கிறது.” எனவும் கூறியிருக்கிறார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பை மீறி வேளாண் தொடர்பான இரண்டு மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதாக்களுக்கு எதிராக முழக்கமிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
Around 1pm on Sunday September 20, the government murdered parliamentary democracy. They broke every rule of #Parliament.
Did they hope that the opposition would just sit and watch?Here's a 9 min video. pic.twitter.com/HMZbFiSXpo
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) September 20, 2020
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் வேளாண் தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது குறித்து, “நாடாளுமன்ற ஜனநாயகத்தை அரசு படுகொலை செய்துள்ளது. அவையின் அத்தனை விதிகளையும் தகர்த்து உடைத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கும் என நினைத்தார்களா?“ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.