உணவு மற்றும் விவசாய அமைப்பின் 75 வது ஆண்டு தினத்தைக் குறிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி 75 ரூபாய் மதிப்பிலான நாணயத்தை இன்று வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அமைப்புக்கும் இந்திய நாட்டுக்குமான நீண்டகால உறவைக் குறிக்கும் வகையிலும் இந்தச் சிறப்பு நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமைப்பின் 75 வது ஆண்டு காணொலி நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மோடி, அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள உயிரி செறிவூட்டிய 8 பயிர்களின் 17 ரகங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.
நிகழ்வில் பேசிய மோடி, “சிறு விவசாயிகளை வலிமைப்படுத்தும் வகையில் நாட்டில் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற அமைப்புகளை உருவாக்குவதற்கான வேலை மிகவும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.” எனத் தெரிவித்துள்ளார்.
छोटे किसानों को ताकत देने के लिए Farmer Producer Organizations यानि FPOs का एक बड़ा नेटवर्क देश में तैयार किया जा रहा है।
देश में ऐसे कृषि उत्पादक संघ बनाने का काम तेजी से चल रहा है। #SahiPoshanDeshRoshan pic.twitter.com/I3VSJtJmuH
— Narendra Modi (@narendramodi) October 16, 2020
நாட்டின் உணவுப் பாதுகாப்பில் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் அரசாங்கக் கொள்முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை சரியான முறையில் நிர்வாகம் செய்யப்படுவதும், மேலும் தொடரப்படுவதும் மிகவும் அவசியம்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு, ஐக்கிய நாடுகளின் ’உலக உணவு திட்டம்’ என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய சாதனை என்று குறிப்பிட்டு, இந்த அமைப்புடனான இந்திய நாட்டின் தொடர்பும், அதற்காகச் செலுத்தியுள்ள பங்களிப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று நினைவுகூர்ந்தார்.
This year's Nobel Peace Prize being awarded to the World Food Program is a big achievement. India is happy that our contribution and association with it has been historic: Prime Minister Narendra Modi pic.twitter.com/omG6Dsm1cx
— ANI (@ANI) October 16, 2020
கடந்த ஆறு ஆண்டுகளில் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை மோடி எடுத்துரைத்தார். ஊட்டச்சத்து குறைபாட்டினை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான அணுகுமுறையை அரசாங்கம் எடுத்துள்ளது என்று மோடி கூறியுள்ளார்.
மேலும், பெண்களின் திருமண வயது குறித்து, ”பெண்களின் சரியான திருமண வயதை நிர்ணயிப்பதற்கான ஆலோசன நடந்துவருகிறது. சம்பந்தப்பட்ட குழு இன்னும் பதிலளிக்காதது ஏன் என்று நாடு முழுவதுமிருந்து மகள்கள் எனக்குக் கேட்டெழுதுகிறார்கள்.”
Discussion is underway to decide the right age for marriage of our daughters. From across the country, daughters write to me asking why hasn't the concerned committee given its decision yet. I assure all daughters that as soon as the report comes, govt will act on it: PM Modi pic.twitter.com/5qna5V3lZQ
— ANI (@ANI) October 16, 2020
”குழுவிடம் இருந்து அறிக்கை வந்ததும் அரசாங்கம் இதுகுறித்து உடனடியாகச் செயல்படும் என நான் நாட்டின் பெண்களுக்கு உறுதியளிக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி ட்விட்டரில், “1920 ம் ஆண்டிலும் சரி, 2020 ம் ஆண்டிலும் சரி, மக்களுக்கு எதிரான கறுப்புச் சட்டங்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நாட்டு மக்கள் அணி திரண்டிருக்கிறார்கள்.”
देश की जनता हर बार जनविरोधी काले फैसलों के खिलाफ उठ खड़ी हुई है। वो चाहे सितंबर 1920 की बात रही हो, चाहे सिंतबर 2020 की।
भाजपा के फैसले देश को बर्बाद और कमजोर कर रहे हैं।#QandAwithModi pic.twitter.com/mEmFAVOlr6
— Congress (@INCIndia) October 16, 2020
”பாரதிய ஜனதா கட்சியின் முடிவுகள் நாட்டைப் பலகீனப்படுத்தி அழித்து வருகிறது.” என்று குற்றம் சாட்டியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.