Aran Sei

பூச்சிகொல்லி மருந்தை அதிகவிலைக்கு விற்றவரை கொலை செய்த மாவோயிஸ்டுகள்

அதிக விலையில் பூச்சிகொல்லி மருந்து விற்றதற்காக, தெலங்கான ராஷ்ட்ரிய சமிதி கட்சியை சேர்ந்த பீமேஷ்வர ராவ் என்பவரை மாவோயிஸ்ட்டுகள் கொலை செய்துள்ளதாக தி இந்து’செய்தி வெளியிட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் முலுகு மாவட்டத்தில், அலுபகா கிராமத்தை சேர்ந்த பீமேஷ்வர ராவின் இல்லத்திற்கு சனிக்கிழமை இரவு 6 பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளனர்.

பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும், மருத்துவமனைக்குச் செல்ல பணம் தேவை என்றும் அவர்கள் கேட்டதாகவும், பீமேஷ்வர ராவ் கதவை திறக்காததால் கதவை உடைத்துக்கொண்டு அவர்கள் உள்ளே சென்றதாகவும் தி இந்து கூறுகிறது.

பின்னர் பீமேஷ்வர ராவை வெளியே இழுத்து வந்து அவர்கள் கத்தியால் குத்தியதாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சத்தம் கேட்டு, அக்கம்பத்தில் உள்ளவர்கள் விழித்துக்கொண்டதால் அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும், படுகாயமடைந்த பீமேஷ்வர ராவ், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவோயிஸ்ட் கட்சியின் வெங்கடாபுரம் – வஜெடு கமிட்டி சார்பாக வெளிடப்பட்டுள்ள கடிதத்தில், பீமேஷ்வர ராவ், கிராமத்தினருக்கு அதிக விலையில் பூச்சிகொல்லி மருந்துகளை விற்பனை செய்து, கொள்ளை லாபம் பாத்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், ஆளும் கட்சியில் தனக்கிருக்கும் பலத்தை பயன்படுத்தி, அந்த பகுதி இளைஞர்களை பொய் வழக்குகளில் சிக்க வைத்தாகவும் மாவோயிஸ்ட்டுகளின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தி இந்து கூறுகிறது.

இதுகுறித்து தி இந்து விடம் பேசியுள்ள காவல்துறை அதிகாரி ஒருவர், மாவோயிஸ்ட்டுகள் பீமேஷ்வரராவிடம் பலமுறை பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாகவும், ஆனால் அவர் தரமறுத்ததால், அவரை கொலை  செய்துவிட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்