Aran Sei

“நீடித்த அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் ஜம்மு & காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் ” – மோடிக்கு இம்ரான் கான் கடிதம்

image credit : thewire.in

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், “முடிவை நோக்கிய ஒரு பேச்சு வார்த்தைக்கு”, “சாதகமான சூழலை” உருவாக்குவது அவசியமானது என்று கூறியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்ற வாரம் திங்கள் கிழமை அன்று பாகிஸ்தான் தினத்தை ஒட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எழுதிய கடிதத்தில், “ஒரு அண்டை நாடாக, பாகிஸ்தானுடன் சுமுகமான உறவுகளை இந்தியா விரும்புகிறது. இதற்கு பயங்கரவாதமும், பகைமையும் இல்லாத ஒரு நம்பிக்கை அளிக்கும் சூழல் அவசியம்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

சிந்து நதிநீர் பங்கீடு – இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் ஆணையர்களின் சந்திப்பு

இதற்கு பதிலளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் “பாகிஸ்தானும், இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான, கூட்டுறவு உறவுகளை விரும்புகிறது” என்று மார்ச் 29-ம் தேதியிட்ட தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

“தெற்கு ஆசியாவில் நீடித்த அமைதியும், நிலைத்தன்மையும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லா பிரச்சினைகளையும், குறிப்பாக ஜம்மு & காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதை சார்ந்திருக்கின்றன என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

காஷ்மீரில் ஜனநாயகத்தை படுகொலை செய்யும் பாஜக : மெஹ்பூபா முஃப்தி கண்டனம்

டான் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்தியாவிலிருந்து பருத்தி இறக்குமதி செய்வதற்கான தடையை பாகிஸ்தான் இன்று நீக்கவிருப்பதாக தி வயர் குறிப்பிடுகிறது.

ஆகஸ்ட் 2019-ல் ஜம்மு & காஷ்மீரின் அரசியல் சட்ட நிலையை மாற்றிய பிறகு, இடைநிறுத்தப்பட்ட இந்திய- பாகிஸ்தான் வர்த்தம் மீண்டும் உயிர் பெறுவதற்கான தொடக்கம் இது என்று தி வயர் கூறியுள்ளது. மே 2020-ல் அத்தியாவசிய மருந்துகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான தடையை பாகிஸ்தான் நீக்கியிருந்தது.

பாகிஸ்தானின் ஜவுளித் துறை அமைச்சகம், இந்தியாவிலிருந்து பருத்தி இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு அமைச்சரவையின் பொருளாதார ஒருங்கிணைப்பு குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் இரு நாட்டு உறவுகள் மிக மோசமடைந்திருந்த நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இரு தரப்பும் போர்நிறுத்தத்தை கறாராக கடைப்பிடிக்கும் என்று இரு தரப்பும் அறிவித்திருந்தன. அது முதல் எல்லைப் பகுதி அமைதியாக உள்ளது என்று தி வயர் தெரிவிக்கிறது.

இந்தியா – பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் தலையீடு – இந்திய வெளியுறவுத் துறை மௌனம்

மேலும், இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான சிந்து நதி நீர் ஆணையத்தின் கூட்டமும் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்த மாதம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.

இப்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியும் தஜிகிஸ்தானில் நடைபெறும் ஆசியாவின் இதயம் கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர் என்று தி வயர் தெரிவிக்கிறது. இருவரும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஊகங்கள் உலாவுவதாக தி வயர் கூறுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்