Aran Sei

தேசிய விலங்காகப் `பசு’ வை அறிவிக்கக் கோரி ‘பாத யாத்திரை’

த்திய அரசு தேசிய விலங்காகப் பசுவை அறிவிக்க வலியுறுத்தி திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பாத யாத்திரை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி) அறக்கட்டளை அமைப்பின் உறுப்பினராக உள்ள `பசுக் காவலர்’ கே.சிவகுமார், த்திய அரசு பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பதியில் இருந்து பாத யாத்திரை செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது இவருடைய இரண்டாவது பாத யாத்திரை ஆகும். இதற்கு முன் நவம்பர் 5 முதல் 7 வரை ஹைதராபாத்தில் இருந்து தெலங்கானாவின் யாதத்ரி கோயில் வரை நூற்றுக்கணக்கான பசு ஆர்வலர்களுடன் ‘கோ மஹா பாத யாத்திரை’ நடத்தியுள்ளார்.

மாட்டுச் சாண சிப் குறித்த ஆய்வு முடிவுகள் எங்கே? அறிவியலாளர்கள் கேள்வி

நேற்று (நவம்பர் 8), ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருச்சனூரில் நடந்த ஸ்ரீ பத்மாவதி கோ சேவா சதன் நிகழ்ச்சிக்கு சிவக்குமார் வந்துள்ளார். அப்போது மாடுகளுக்குப் பிரார்த்தனை செய்து பசு ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு இந்து மத அமைப்புகளைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

பின்னர், திருச்சனூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி கோயிலில் இருந்து திருமலை திருப்பதியின் அடிவாரமான அலிபிரி வரை விரைவில் ‘பாதயாத்திரை’ தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

நன்றி : thehindu.com

கோ சேவா சதன் அமைப்பின் செயலாளரும் விலங்கு நல வாரிய முன்னாள் உறுப்பினர் ஏ.வி.கிருஷ்ணா ராவ், “பசு பாதுகாப்பை மத ரீதியாகப் பார்க்காமல், அதற்கு அப்பாலும் பார்க்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

இந்து அமைப்பு தலைவர்களான ஓம்கர், ராஜேஷ், சாய் கணேஷ் மற்றும் உள்ளூர்ப் பசு ஆர்வலர் சையத் மீர் ஆகியோர் ‘கோ பூஜை’ செய்து, பாத யாத்திரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுவைக் கொன்று மாட்டிறைச்சி விற்பனை செய்ததாக ரஹ்முதீன் என்பவர் பசுவதை தடுப்புச் சட்டத்தின் 3, 5 மற்றும் 8 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு மாத காலம் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதையடுத்து அவர் அலகாபாத் உயர் நீதி மன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

“பசுவதை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது” – அலகாபாத் உயர்நீதிமன்றம்

மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், “உத்தரப்பிரதேச மாநிலத்தின் ‘பசு வதை தடுப்புச் சட்டம் 2020’ அப்பாவி மக்களுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்