Aran Sei

ஆக்ஸ்பாம் இந்தியா உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெறுவது நிறுத்திவைப்பு – ஒன்றிய அரசு தகவல்

க்ஸ்பாம் இந்தியா, ஐஐடி டெல்லி, ஜாமியா மில்லியா இஸ்லாமியா, இந்திய மருத்துவ கூட்டமைப்பு, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் உட்பட கிட்டத்தட்ட 6,000 நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதற்கான வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட (எஃப்சிஆர்ஏ) பதிவு முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் தங்கள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டி விண்ணப்பிக்கவில்லை அல்லது ஒன்றிய உள்துறை அமைச்சகம் அவர்களின் விண்ணப்பங்களை நிராகரித்திருக்கிறது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள் ஆகியவை வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற வேண்டுமானால், ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து சான்று அல்லது அங்கீகாரம் பெற்றால் மட்டுமே நிதியுதவி பெற முடியும்.

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, அச்சட்டத்தின் கீழ் பதிவு நிறுத்தப்பட்ட அல்லது பதிவு காலாவதியான நிறுவனங்கள் என இந்திரா காந்தி தேசிய கலை மையம், இந்திய பொது நிர்வாக நிறுவனம், லால் பகதூர் சாஸ்திரி நினைவு அறக்கட்டளை, லேடி ஸ்ரீ ராம் பெண்களுக்கான கல்லூரி, டெல்லி பொறியியல் கல்லூரி மற்றும் ஆக்ஸ்பாம் இந்தியா ஆகியவை அடங்கும்.

கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பது போல் நடிக்கும் பாஜக – கேரளா முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம்

எஃப்சிஆர்ஏவின் கீழ் பதிவு செய்யப்பட்ட என்ஜிஓக்கள் மற்றும் அமைப்புகளின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உடைய அதிகாரிகள், இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வது ஜனவரி 1ஆம் தேதி முதன் நிறுத்தப்படுகிறது என்று கூறியுள்ளனர்.

நேற்று(டிசம்பர் 31) வரை எஃப்சிஆர்ஏவில் 22,762 பதிவு செய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இருந்தன. இன்று(ஜனவரி 1), அந்த எண்ணிக்கை 16,829 தன்னார்வ தொண்டு நிறுவனங்களாக குறைந்துள்ளது.

ஆக்ஸ்பாம் இந்தியா நிறுவனமானது இந்தியாவில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் நலம், வறுமை,  கல்வி, காலநிலை மாற்றம் போன்ற காரணிகள் குறித்து ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆக்ஸ்பாம் இந்தியா வெளியிட்ட கல்விசார் ஆய்வறிக்கை ஒன்றில், பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டைவிட இவ்வாண்டு இரட்டிப்பாகும் என்று மதிப்பிட்டிருந்தது. அதில், ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளின் விகிதாச்சாரம் அதிகமாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டி இருந்தது.

கோவையில் காவல்துறையை தாக்கியதாக ஆர்எஸ்எஸ் மீது புகார் – தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க கு.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்

ஜூலை மாதம், ஆக்ஸ்பாம் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு சுகாதார காரணிகளில் சாதி, மத மற்றும் பாலினங்களுக்கிடையே பெரியளவிலான ஏற்றத்தாழ்வுகள் உள்ளன என்று தெரிவித்திருந்தது. பொதுப் பிரிவினரைவிட எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளில் உள்ளோரின் சுகாதாரம் மோசமாக உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது.

Source: The Hindu, Oxfam India

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்