பல ஊழல் வழக்குகளில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஷ்வி யாதவின் பெயர் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கக் கூடாது என்று பீகாரின் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கோரிக்கை வைத்துள்ளது.
ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மேவா லால் சவுத்ரி, ஊழல் மோசடி தொடர்பாக, கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தக் கோரிக்கை எழுந்துள்ளதாக ‘தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேதா லால் சவுத்ரி பதவியேற்ற இரண்டு நாட்களில் ராஜினாமா செய்தது, குற்றம், ஊழல் மற்றும் வகுப்புவாதத்தை, முதலமைச்சர் எந்த அளவு சகித்துக்கொள்கிறார் என்பதைக் காட்டுகிறது என்று தேஜஷ்வி யாதவ் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், நேற்று (நவம்பர் 21), பாட்னாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், ஐக்கிய ஜனதா தளத்தின் மாநிலத் தலைவர் வசிஷ்ட நாராயண் சிங், செயல் தலைவர் அசோக் சவுத்ரி மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் சஞ்சய் சிங், நீரஜ் குமார் மற்றும் அஜய் அலோக் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
அப்போது, மேதா லால் சவுத்ரியைக் கல்வி அமைச்சராக நியமித்ததற்கு முதலமைச்சர் நிதீஷ் குமார் மீது தேஜஷ்வி யாதவ் வீணான அவதூறுகளைப் பரப்புகிறார் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர்கள் கண்டித்துள்ளதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.
மேலும், ஆளும் கட்சியின் எம்எல்ஏ-வான மேதா லால் சவுத்ரி மீது வழக்குத் தொடர முன்வருமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரை, மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
பீகார் தேர்தல் முடிவுகள் – கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன? – நவநீத கண்ணன்
இதன் மூலம் நாங்கள் அவரைக் காப்பாற்ற முயல்வதாக, எதிர்க்கட்சிகள் கூறிவருவது பொய்யாகி உள்ளது என்றும் இந்த விஷயத்தில் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
பீகார் தேர்தல் – பாஜக 282 கோடி வசூல் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலம்
ராகோபூர் தொகுதியில்,வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, தேஜஷ்வி யாதவ், அவரது பெயர் சேர்க்கப்பட்ட வழக்குகள் குறித்த முழு விவரங்களையும் தெரிவிக்கவில்லை என்றும் இந்த விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் உடனே கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.
பீகார் அமைச்சரவை – பாதிக்கும் மேற்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு நிலுவை
பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயப் பல்கலைக்கழகத்தில், பணியமர்த்தலில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மேதா லால் சவுத்ரி மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2010-15 ஆம் ஆண்டுகளில், மேதா லால் சவுத்ரி துணைவேந்தராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.