Aran Sei

`கண்ணீரை வர வைக்கும்’ வெங்காயம் தக்காளி விலை : ஆய்வு முடிவுகள்

credits : the newindian express

ந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களில், அத்தியாவசியக் காய்கறிகளான வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. கடும் மழை மற்றும் வெள்ளத்தால் சந்தைக்குக் காய்கறிகளின் வரத்து குறைந்ததால் இந்த விலையேற்றம் நடந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்கனவே சரியான வருமானம் இல்லாமல் தவிக்கும் இந்திய மக்களுக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக இது தொடர்பான ஆய்வை நடத்திய லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

லோக்கல் சர்க்கிள்ஸ் (local circles) எனும் அமைப்பு கடந்த இரண்டு மாதங்களாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் ஒரு கிலோ வெங்காயம் தக்காளிக்கு, முன்பை விட எவ்வளவு அதிகம் பணத்தை மக்கள் செலவளிக்கிறார்கள் என்று கணக்கிட்டது. அந்த ஆய்வில் 71 சதவீத மக்கள், தக்காளி கிலோ 50 ரூபாய்க்கும் அதிகமாகக் கொடுத்தும் உருளைக்கிழங்கிற்குக் கிலோ 40 ரூபாய்க்கு அதிகமாகக் கொடுத்தும் வெங்காயத்திற்குக் கிலோ  50 ரூபாய்க்கு அதிகமாகக் கொடுத்தும் வாங்கியதாகக் கூறியுள்ளனர்.

இதே அமைப்பு செப்டம்பர் 11, 2020-ல் வெளியிட்ட ஆய்வு முடிவில் 61 சதவீத குடும்பங்கள் தக்காளிக்குக் கிலோ 60 ரூபாய்க்கு அதிகமாகவும், உருளைக் கிழங்கிற்குக் கிலோ 30 ரூபாய்க்கு அதிகமாகவும் மற்றும் வெங்காயத்திற்குக் கிலோ 25 ரூபாய்க்கு அதிகமாகவும் கொடுத்து வாங்கியதாகக் கூறியுள்ளனர்.

பெரும்பாலான குடும்பங்கள் அத்தியாவசியக் காய்கறிகள் வாங்குவதற்காகக் கொடுக்கும் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

அதாவது, ஒரே ஒரு மாதத்தில் ஒரு கிலோ உருளைக்கிழங்கிற்குக் கொடுத்த விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது; ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 100 சதவீதம் அதிகரித்துள்ளது; ஒரு கிலோ  தக்காளியின் விலை 15 சதவீதம் குறைந்துள்ளது.

மேலும் இந்த மூன்று காய்கறிகளின் விலை பற்றிய தனிப்பட்ட தரவுகள் 42 சதவீத மக்கள் தக்காளியைக் கிலோ 60 ரூபாய்க்கும் அதிகமாக கொடுத்து வாங்கியதாகவும் உருளைக் கிழங்கை கிலோ 60 ரூபாய்க்கும் அதிகமாக கொடுத்து வாங்கியதாகவும் வெங்காயத்தைக் கிலோ 70 ரூபாய்க்கும் அதிகமாக கொடுத்து வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

’ வெங்காயத்தின் விலையே கண்ணீர் வரவைக்கிறது ’ : அத்தோக்கடை சாந்தி

இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில்,

  • 29 சதவீத மக்கள் ஒரு கிலோ தக்காளியை ரூபாய் 50-59 க்குள் வாங்கியதாகவும், ஒரு கிலோ வெங்காயத்தை ரூபாய் 50-69 க்குள் வாங்கியதாகவும், ஒரு கிலோ உருளைக் கிழங்கை ரூபாய் 40-49 க்குள் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
  • 11 சதவீத மக்கள் ஒரு கிலோ தக்காளியை ரூபாய் 30-49 க்குள் வாங்கியதாகவும், ஒரு கிலோ வெங்காயத்தை ரூபாய் 30-49 க்குள் வாங்கியதாகவும், ஒரு கிலோ உருளைக் கிழங்கை ரூபாய் 20-29 க்குள் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
  • வெறும் 6 சதவீத மக்கள்தான் ஒரு கிலோ தக்காளியை ரூபாய் 20 அல்லது அதற்கும் குறைவாக வாங்கியதாகவும், ஒரு கிலோ வெங்காயத்தை ரூபாய் 29 அல்லது அதற்கும் குறைவாக வாங்கியதாகவும், ஒரு கிலோ உருளைக்கிழங்கை ரூபாய் 19 அல்லது அதற்கும் குறைவான விலையில் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

மக்களிடம் மற்றொரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அதாவது 2019 ஐ விட 2020 ல் வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு வாங்கும் விலை எவ்வளவு அதிகரித்திருக்கிறது என்பதாகும். இதற்கு சுமார் 7904 பேர் பதிலளித்தனர். அதில் 70 சதவீதக் குடும்பங்கள் 25 முதல் 100 சதவீதம் வரை விலை அதிகரித்துவிட்டது என்றும் 5 சதவீதம் மக்கள் கடந்த ஆண்டு இருந்த விலையே தருவதாகவும், 1 சதவீத மக்கள் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதாகவும் பதிலளித்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள 242 மாவட்டங்களில் உள்ள 16,000 மக்களை ஆய்வு செய்து இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது லோக்கல் சர்க்கிள்ஸ் அமைப்பு. இந்த அத்தியாவசியக் காய்கறிகளின் அதிகபட்ச விலை மும்பையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் மும்பையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 130 ரூபாயாகவும், ஒரு கிலோ தக்காளியின் விலை 60 ரூபாயாகவும், ஒரு கிலோ உருளைக் கிழங்கின் விலை 60 ரூபாய் எனவும் விற்கப்பட்டுள்ளது. வெவ்வேறு மாநிலங்களில், இந்த அத்தியாவசியக் காய்கறிகளின் சில்லறை விலையைப் பல விஷயங்கள் தீர்மானிக்கின்றன.

தீபாவளிக்கு முன் 25,000 டன் வெங்காயம் இறக்குமதி : அமைச்சர் பியூஷ் கோயல்

கொரோனா நோய்த்தொற்று வந்து 8 மாதங்கள் ஆகிய நிலையில் வேலையிழந்து, சம்பளம் குறைக்கப்பட்டுச் சரியான வருமானம் இல்லாமல் கடன் வாங்கிக் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வந்த பிறகு 73 சதவீதக் குடும்பங்கள் தங்கள் வருமானத்தை அத்தியாவசியப் பொருட்களுக்கே செலவு செய்துவிடுகின்றன என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த விலையேற்றத்தை சிலர் பயன்படுத்தி அத்தியாவசியக் காய்கறிகள் பதுக்கலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

‘வெங்காயத்திலும் ஊழல் வேண்டாம்’ – மு.க.ஸ்டாலின் ட்வீட்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்