Aran Sei

பீகார் தேர்தல் – முதல்வர் நிதீஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்குதல்

நேற்று (நவம்பர் 3) பீகார் மாநிலம் மதுபனியில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, முதல்வர் நிதீஷ் குமார் மீது வெங்காயம் வீசப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக நடந்து வரும் சட்டப் பேரவை தேர்தலில், முதல் இரண்டு கட்ட வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. மூன்றாம் கட்டத்தில் 78 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நவம்பர் 7-ம் தேதி நடக்கவுள்ளது. வாக்குகள் நவம்பர் 10-ம் தேதி எண்ணப்படவுள்ளது.

இதில் மும்முனைப் போட்டியாக ஆளும் கட்சியான முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தோடு பாஜக கூட்டணியிலும் (NDA), லல்லு பிரசாத் யாதவ்வின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணியிலும் (UPA), மத்தியில் பாஜகவோடு கூட்டணியில் இருக்கும் லோக் ஜனசக்தி கட்சி தனித்தும் போட்டியிட்டு தேர்தலைச் சந்திக்கின்றன.

பீகார் தேர்தல் – “கிரிமினல் ரெட் அலெர்ட் தொகுதிகள் 89%” : ஏடிஆர்

இந்நிலையில், நேற்று (நவம்பர் 3) மூன்றாம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டம் மதுபானியில் நடைப்பெற்றது. அதேநேரம், 94 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவும் நடந்து கொண்டிருந்தது.

அப்போது முதல்வர் நிதீஷ் குமார், பீகார் மாநிலத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து பேசிக் கொண்டிருந்த போது, அவர் மீது வெங்காயங்கள் எறியப்பட்டன. ஆனால் அவர் மீது விழவில்லை. உடனே முதல்வரின் பாதுகாவலர்கள், அவரை வெங்காய வீச்சில் இருந்து மறைத்து பாதுகாத்தனர் என்று ’என்டிடிவி’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த நிதீஷ் குமார், கூட்டத்தை நோக்கி, “நிறைய எறியுங்கள், நிறைய எறியுங்கள்” என்று கூறியுள்ளார்.

அப்போதே வெங்காயம் எறிந்தவரை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்துள்ளனர். அதற்கு, “அவரை விட்டுவிடுங்க. அவரை கண்டு கொள்ளாதீர்கள்.” என்று நிதீஷ் குமார் கூறியதாக ’என்டிடிவி’ குறிப்பிட்டுள்ளது.

அதற்கு பின் பேச்சைத் தொடர்ந்த நிதீஷ் குமார், எதிர்க்கட்சி தலைவரான தேஜஷ்வி யாதவையும், அவரின் தந்தையும் முன்னாள் முதல்வருமான லல்லு பிரசாத் யாதவையும் விமர்சித்து பேசியுள்ளார்.

பீகார்: மோடியை நோக்கி எழுப்பப்பட்ட 11 கேள்விகள்

பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், முதல்வர் நிதீஷ் குமாரும், அவரின் சில அமைச்சர்களும் தொடர்ந்து, இதுபோல மக்களின் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு, சப்ராவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், நிதீஷ் குமார் கோபத்தின் உச்சத்துக்கு சென்றுள்ளார். கூட்டத்தின் போது ”லல்லு பிரசாத் ஜிந்தாபாத் என்று ஒரு சிலர் முழங்கினர்.

பீகார் தேர்தல் – மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளுக்கு விடிவில்லை

“யார் இது போல அறிவில்லாமல் கத்துவது? கை தூக்குங்கள். வீணாக குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். எனக்கு வாக்களிக்க விருப்பம் இல்லை என்றால், வாக்களிக்க வேண்டாம்.” என்று நிதீஷ் குமார் கோபத்தில் கத்தியதாக ‘என்டிடிவி’ செய்தி தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்