Aran Sei

ஜம்மு-காஷ்மீர் – ” மாவட்ட கவுன்சிலர்களிடம் பாஜக குதிரை பேரம் “

Image Credits: Deccan Herald

ண்மையில், ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தல் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற்றது என்பதை அனைத்து கட்சிகளு ஒப்புக் கொண்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஒரு ஒலிப் பதிவைப் பகிர்ந்து பிரதமரின் இந்தக் கருத்தை உடனடியாகக் கேள்விக்குள்ளாகியுள்ளார். அதில், பாஜகவின் கூட்டாளிகள் என்று கூறப்படுபவர்கள் எவ்வாறு  குதிரை பேரம் நடத்துகிறார்கள் என்பது பதிவாகியுள்ளது.

இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள குரல்கள், தேசிய மாநாட்டு கட்சியின் வெற்றிபெற்ற வேட்பாளர் ஒருவரை பாஜகவின் பி அணியாகக் கருதப்படும் ஒரு கட்சியுடன் இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்த குறிக்கிறது. அதற்குப் பதிலாகச் சிறைச்சாலையில் இருக்கும் வேட்பாளரின் உறவினரை விடுவிப்பதற்கு உத்தரவாதம் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.

பல தடைகளை கடந்து, 370-வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காகப் போராடும் குப்கர் பிரகடனத்திற்கான ஏழு கட்சிகள் அடங்கிய மக்கள் கூட்டணி வென்றுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக 75 இடங்களையும் குப்கர் கூட்டணி 112 இடங்களையும் வென்றுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய மோடி, உரையையும் நிகழ்த்தியுள்ளார். அதற்குச் சில மணிநேரங்களுக்குப் பிறகு, உமர் ஒரு ஊடக மாநாட்டில்  உரையாற்றியுள்ளார். அப்போது, அவர் ஒரு தொலைபேசி ஒலிப் பதிவைப் பகிர்ந்துள்ளார்.

ஊடக மாநாட்டில் கலந்து கொண்ட ஒரு நபருக்கும், தேசிய மாநாட்டு கட்சிக்காக ஷோபியனில் வெற்றிபெற்றவரான யஸ்மீன் ஜானின் கணவருக்கும் இடையில் இந்த உரையாடல் நடந்துள்ளது. அவர் வெள்ளிக்கிழமை பாஜகவின் பி அணியாகக் காணப்படும் அப்னி கட்சியில் இணைந்துள்ளார்.

ஒலிப் பதிவில், தனது கட்சியில் சேர்ந்தால் அவரது சகோதரரை சிறையில் இருந்து விடுவிப்பதாக அப்னி கட்சித் தலைவர் அல்தாஃப் புகாரி  உறுதியளித்ததை அடுத்து தனது மனைவி கட்சி மாறியுள்ளதாக யஸ்மீன் ஜானின் கணவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்