Aran Sei

இந்தியாவில் அதிகாரப்பூர்வ கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை சந்தேகமாக உள்ளது – ப. சிதம்பரம்

ந்தியாவில் அதிகாரப்பூர்வ கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை சந்தேகத்தை வரவழைக்கிறது என முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அறிவியல் பத்திரிக்கை ஒன்றை மேற்கோள் காட்டிய அவர், ”1-6-2020 முதல் 1-7-2021 வரை இந்தியாவில் 3,20,000 கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பத்திரிக்கையில் செய்தி வெளியாகி இருக்கிறது. இது அரசின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையான 4,00,000விட 8 மடங்கு அதிகம்” என தெரிவித்துள்ளார்.

”மொத்த உயிரிழப்புகளில் 2,70,000 உயிரிழப்புகள் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களில் ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளர்.

தமிழகத்தில் உள்ள 20% பள்ளிகளில் கேஸ் சிலிண்டர் இல்லை – விறகை பயன்படுத்தி மதிய உணவை சமைக்கும் பணியாளர்கள்

இந்தியாவில் 6,38,365 கிராமங்கள் உள்ளது என கூறிய ப. சிதம்பரம், “அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள் சராசரியாக ஒரு கிராமத்திற்கு ஒன்றுக்கும் குறைவான இறப்புகள் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கின்றன. இது நம்ப முடியாத வகையில் உள்ளது. இதனுடன் நகரங்கள் மற்றும் மாநகரங்களின் இறப்பு எண்ணிக்கையைச் சேர்த்து கொள்ளுங்கள். அதிகாரப்பூர்வ எண்ணிக்கை சந்தேகத்திற்குரியதாக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள சிதம்பரம், புதிய கணக்கெடுப்பு அவசியம் என கூறியுள்ளார்.

Source : The New Indian Express

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்