Aran Sei

பள்ளிப்பாடத்தில் மாநில பாடல் – ஒடிசா அரசு திட்டம்

டிசாவின் மாநிலப் பாடலான ‘பண்டே உத்கலா ஜனானி’ பாடலை, மாநிலப் பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகச் சேர்க்கக் கோரும் முன்மொழிவுக்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து கடந்த 13 ஆம் தேதி, இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று ‘தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, புகழ்பெற்ற கவிஞர் லக்மிகாந்த மோகபத்ரா எழுதிய ‘பண்டே உத்கலா ஜனானி’ என்ற பாடல், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒடிசாவின் மாநிலப் பாடலாக இதை அறிவித்திருந்தது.

 

`சாதி மறுப்புத் திருமணம் செய்தால் இரண்டரை லட்சம்’ – ஒடிசா முதல்வர் அறிவிப்பு

கடந்த மே 30 அன்று நவீன் பட்நாயக் விடுத்த அழைப்பை ஏற்று, உலகெங்கிலும் உள்ள ஒடியா மக்கள் கொரோனா தொற்று காலத்தில் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தப் பாடலைப் பாடினார்கள் என்று ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.

மேலும், “மாநிலப் பாடலைப் பாடுவது மாணவர்களிடையே தேசபக்தியை வலுப்படுத்தும். மேலும், அவர்களை வாழ்க்கையில் முன்னேற ஊக்குவிக்கும்” என்று நவீன் பட்நாயக் கூறியதாக `தி இந்து’ தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு நாள் : மாநிலத்தின் இறையாண்மையைக் காப்போம் – தோழர் தியாகுவின் சிறப்புக் கட்டுரை

ஒவ்வொரு சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளிலும் ‘பண்டே உத்கலா ஜனானி’பாடல் இறுதியில் பாடப்படுகிறது.

மனோன்மணியம் பெ.சுந்தரனார் எழுதிய புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணி நூலில் உள்ள துதிப்பாடலின் ஒரு பகுதியான ’நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ பாடல், தமிழக மாநிலப் பாடலாக உள்ளது. இப்பாடலை 1970 ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்