Aran Sei

உக்ரைன்: போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் இந்தியாவை சேர்ந்த மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி சகோதரிகள்

டகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த இரண்டு மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி அருட்ச் சகோதரிகள் உக்ரைனை விட்டு வெளியேற மறுத்துள்ள நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு தலைநகர் கிவ் நகரில் வீடற்ற உக்ரைனியர்களுக்கு ஆதரவாக உள்ளனர்.

ஆனால், உணவின்றி தவித்து வரும் அவர்கள், தங்களுடைய தற்காலிக தங்குமிடத்தை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர்.

ஐஸ்வாலுக்கு வடக்கே தோராயமாக 15 கிமீ தொலைவில் உள்ள சிஹ்ஃபிர் கிராமத்தைச் சேர்ந்த அருட்ச் சகோதரி ரோஸ்லா நுதாங்கி (65), மற்றும் ஐஸ்வாலின் எலக்ட்ரிக் வெங் பகுதியைச் சேர்ந்த அருட்சகோதரி ஆன் ஃப்ரிடா (48) மற்றும் மற்ற நாடுகளைச் சேர்ந்த மூன்று கன்னியாஸ்திரிகள் இணைந்து, வீடற்ற 37 உக்ரைனியர்களையும், கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவியையும் கவனித்து வருகின்றனர்.

தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து மனு: இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

கிவ்வில் உள்ள ஒரு சேமிப்புக் கிடங்கில் (கோடவுன்) தற்போது தங்கியுள்ள அவர்கள், உக்ரைனில் இருந்தபடியே தங்கள் பணியைத் தொடரவுள்ளதாக உறுதிப்பட கூறியதாக அருட்சகோதரிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சகோதரி ரோஸ்லா நுதாங்கியின் உறவினரான சில்வீன் ஜோதன்சியாமி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “என்னுடைய அத்தை ரோஸ்லா நுதாங்கி மற்றும் சகோதரி ஆன் ஃப்ரிடா பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால், உணவுப் பற்றாக்குறையால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நேற்று முன்தினம் (மார்ச் 21) அவர்களுடன் தொலைபேசியில் பேசினேன்” என்று கூறியுள்ளார்.

“நாங்கள் நன்றாக இருக்கிறோம். முன்பு சேமித்து வைத்திருந்த உணவுப் பொருட்களை இப்போது சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இப்போது எங்களால் வெளியில் செல்ல முடியாது. உணவு சேமிப்பு கிடங்கு ஒன்றில் ஒளிந்திருக்கிறோம்” என்று சகோதரி ரோஸ்லா நுதாங்கி கூறியதாக சில்வீன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களைத் தொடர்ந்து கிறிஸ்தவர்களைக் குறிவைக்கும் இந்துத்துவாவினர்- ப.சிதம்பரம்

அந்த உணவுக் கிடங்கிற்குள் தஞ்சம் அடைந்துள்ள 37 வீடற்ற உக்ரேனியர்களை சகோதரிகள் ரோஸ்லா நுதாங்கி, சகோதரி ஆன் ஃப்ரிடா மற்றும் மூன்று சகோதரிகள் பராமரித்து வருவதாக சில்வீன் கூறியுள்ளார்.

மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி என்பது அன்னை தெரேசாவால் தொடங்கப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

1981ஆம் ஆண்டு மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியில் சேர்ந்த சகோதரி ரோஸ்லா நுதாங்கி, 1991ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டார். மாஸ்கோவில் 10 ஆண்டுகள் அவர் பணியாற்றினார். 2013ஆம் ஆண்டு உக்ரைன் வந்தடைந்த சகோதரி ரோஸ்லா நுதாங்கி, முன்னாள் சோவியத் நாடுகள் பலவற்றில் தொண்டாற்றியுள்ளார்.

இந்தியாவில் சில ஆண்டுகள் தொண்டாற்றி வந்த சகோதரி ஆன் ஃப்ரிடா, லிதுவேனியா, சைபீரியா மற்றும் ஆர்மீனியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு மிஷனரி சார்பாகச் சென்றுள்ளார். 2019ஆம் ஆண்டு உக்ரைனுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

Source: CUE API, The Hindu.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்