Aran Sei

தனிநபர் பத்திரங்கள் தாக்கல் செய்ய விவசாயிகளுக்கு நோட்டீஸ் – திரும்ப பெற்றது உத்தரபிரதேச அரசு

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதை தடுக்கும் விதமாக, உத்திரபிரதேச மாநிலம் சீதாபூரில் வசிக்கும் 162 விவசாயிகளை, ரூபாய் 10 லட்சம் வரையிலான தனிநபர் உறுதி பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழங்கப்பட்ட நோட்டீஸை உத்திர பிரதேச அரசு திரும்பப் பெற்றிருப்பதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

”சமாதானத்தை மீறுவதற்கோ அல்லது அமைதிக்கு இடையூறு விளைவிப்பதற்கோ இனி எந்த அச்சமும் இல்லை” என்பதால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸை திரும்பப் பெற்றதாகப் பிப்ரவரி 2-ம் தேதி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

டிராக்டர் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸை அரசாங்க வழக்கறிஞரால் நீதிமன்றத்தில் நியாயப்படுத்த முடியவில்லை என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸிற்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் ரமேஷ் சின்ஹா, ராஜீவ் சிங் அடங்கிய அமர்வு, நோட்டீஸ் வழங்கிய சீதாபூர் மாவட்ட நீதிபதி, “இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கும்பொழுது கவனமுடன் இருக்க வேண்டும்” என்றும், “இது போன்ற உத்தரவுகள் தன்னிச்சைத்தன்மையை வெளிப்படுத்துவதாகவும், இயற்கை நீதிக்கொள்கைக்கு எதிரானதாகவும் இருக்கக் கூடாது”,  எனக் கூறியுள்ளனர்.

விவசாயிகளிடம் ’தனி நபர் பத்திரம்’ தாக்கல் செய்ய சொன்ன விவகாரம் – உத்திர பிரதேச அரசிடம் விளக்கம் கேட்ட அலகாபாத் உயர்நீதிமன்றம்.

உத்தரபிரதேச அரசின் கூடுதல் வழக்கறிஞர் வி.கே.சாஹி, டிராக்டர் வைத்திருக்கும் 162 விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதில் 43 விவசாயிகள் நேரில் ஆஜரானதாகவும், புதிய சலானி அறிக்கையின் மூலம் அனைத்து விவசாயிகள் மீதான நடவடிக்கையும் கைவிடப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கும்பொழுது, எந்தவொரு தனிநபருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு, கவனமுடன் செயல்பட வேண்டும் என சீதாபூர் மாவட்ட நீதிபதி அறிவுறுத்தப்படுவாரென அரசு வழக்கறிஞர் ஆலோசகர், உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளதாக தி ஹிந்து செய்தி கூறுகிறது.

விவசாயிகளின் போராட்டத்திற்கு பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா ஆதரவு – டிவிட்டரில் பெரும் ஆதரவு

டிராக்டர் வைத்திருக்கும் விவசாயிகள் தனிநபர் உறுதி பத்திரம் தாக்கல் செய்யுமாறு எந்த அடிப்படையில் உத்தரவிடப்பட்டது என பதிலளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு, ஜனவரி 25-ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில், சமூக செயல்பாட்டாளர் அருந்ததி துரு, “விவசாயிகளுக்கு மாநில அரசு அதிகாரிகள் வழங்கியிருக்கும் நோட்டீஸ் அடிப்படையற்றது” என்றும், அவர்கள் வீடுகளைச் சுற்றி வளைத்து, வெளியே வராமல் செய்திருப்பது, அவர்களது தனிநபர் அடிப்படை உரிமையைப் பறிப்பதாக உள்ளது” எனத் கூறி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மாவட்ட நிர்வாகத்திடம் பதிலளிக்க கேட்டிருந்தது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்