வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பான விசாரணை நடத்திய போலிஸ் அதிகாரிகள் 4 பேருக்கு முன்கூட்டியே பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லி கலவரம் – பரிதவிக்கும் பாதிக்கப்பட்டவர்கள்; சுதந்திரமாக திரியும் குற்றவாளிகள்
முன்னாள் ஜேஎன்யு மாணவர் தலைவர் உமர் காலித், ஜாமிய ஒருங்கிணைப்புக் குழு ஊடக ஒருங்கிணைப்பாளர் சஃபூரா ஜர்கர், பிஞ்சரா தோட் அமைப்பைச் சேர்ந்த தேவாங்கனா கலிதா, நடாஷா நார்வால் ஆகியோர் உட்கட 21 பேரை கைது செய்த சிறப்பு விசாரணக் குழுவில் இந்த போலீஸ் அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.
இந்த கலவரங்கள் தொடர்பாக சுமார் 1,700 பேர் கைது செய்யப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.
இந்தக் கலவரங்கள் தொடர்பாக மொத்தம் 755 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 50 கொலை வழக்குகள் குற்றவியல் பிரிவின் கிளைகளுக்கு அனுப்பப்பட்டன. ஒரு வழக்கு சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
புது டெல்லி பகுதி சிறப்புப் பிரிவைச் சேர்ந்த 6 குழுக்களைச் சேர்ந்த 5 போலீசாருக்கு முன்கூட்டியே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் சதிக் குற்றச்சாட்டு குறித்தும் கலவரம் குறித்தும் விசாரித்து வந்த சிறப்புப் பிரிவு பின்னர், சட்டவிரோத நடத்தைகள் தடுப்புச் சட்டம் (UAPA)-த்தின் கீழ், ஆறு குழுக்களைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.
யார் இவர்கள்? எதற்கு சிறையில் உள்ளார்கள்? என்ன குற்றம் செய்தார்கள்?
“இந்த ஆறுக் குழுக்களுக்கு பொறுப்பாக இருக்கும் போலீஸ் அதிகாரிகளை, விசாரணையின்போது சிறப்பாக பணியாற்றிய ஒரு அதிகாரியை பரிந்துரைக்கும்படி சிறப்புக் கிளையின் துணை போலீஸ் ஆணையர் கேட்டுக் கொண்டிருக்கிறார். அனுப்பப்பட்ட 6 பேரில் இரண்டு பேருக்கு வேறு வழக்குகளில் முன்கூட்டியே பதவி உயர்வு கிடைக்கிறது. எனவே, எஞ்சிய 4 பேருக்கு டெல்லி காவல்துறை ஆணையர் முன்கூட்டியே பதவி உயர்வு வழங்கியுள்ளார்” என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவுத்துள்ளார்.
டெல்லி கலவரம் – காவல்துறையினர் சாட்சிகளை அழிக்க முயன்றதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு
ஜனவரி 1-ம் தேதி போலீஸ்காரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்த டெல்லி காவல்துறை ஆணையர் எஸ் என் ஶ்ரீவஸ்தவா, 135 போலீசாருக்கு முன்கூட்டியே பதவி உயர்வு வழங்கப்படுவதாகக் கூறியிருந்தார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.