Aran Sei

’அல்கொய்தா தொடர்புக்கு ஆதாரம் எங்கே’ – ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் கேள்வி

ட்டவிரோத நடவடிக்கைகள்  தடுப்பு  சட்டத்தின் (உபா) கீழ் சிறையில் அடைக்கப்பட்டு,  ஒரு வருடம் கழித்து காளிமுதீன் முஜாஹிரி என்பவருக்கு, தகுந்த ஆதாரம் இல்லை என்று ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

2019 செப்டம்பர் மாதம், பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக, மொஹமட் காளிமுதீன் முஜாஹிரி கைது செய்யப்பட்டார்.

நீ தீவிரவாதியா என்று மட்டுமே கேட்டனர்

அஹ்மத் மசூத் அக்ரம் எஸ்கே மற்றும் அப்துல் ரஹ்மான் கட்கி ஆகிய இருவரையும் சச்சி மதர்சாவில் உள்ள அவரது வீட்டில் காளிமுதீன் சந்தித்ததாகவும், பின்னர் ஜிகாதி என்ற பெயரில் தேசிய விரோதச் செயல்களைச் செய்ய,  குஜராத்திலிருந்து பணம் பெற்றதாகவும் காளிமுதீன் மீது குற்றம் சாட்டப்பட்டதாக ’லைவ்  லா’ இணையதளம்  தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில், அப்போதைய கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனராக இருந்த எம்.எல். மீனா, “அல் கொய்தா அமைப்பில் தேடப்படும் பயங்கரவாதி காளிமுதீன். அவர் டாடாநகர் ரயில் நிலையத்தில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய துணைக் கண்டத்தில் ஜிஹாத்திற்காக இளைஞர்களைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார்.” என்று கூறியதாக ‘தி க்யுண்ட்’ தளம் தெரிவித்துள்ளது.

’முஸ்லீம்கள் மீது வெறுப்பை பரப்புவதா?’- உச்சநீதி மன்றம் கேள்வி

இந்த வழக்கில், ஹஜ் யாத்திரை செய்வதற்கு அரசின் மானியத்தையும் அனுமதியையும் பெற்ற பின் தான் மூன்று முறை காளிமுதீன் சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார். சவுதி அரேபியாவில் எந்தவொரு தீவிரவாத அமைப்பையும் அவர் சந்தித்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்று காளிமுதீனின் தரப்பு வாதிடப்பட்டதாக ‘தி கோக்னெட்’ தளம் தெரிவித்துள்ளது.

” இசுலாமிய வெறுப்பின் குடியரசு ” – புத்தக விமர்சனம்

நவம்பர் 3ஆம் தேதி, ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், “அல்-கொய்தா அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகள், காளிமுதீன்  ஈடுபாட்டுள்ளதாக எந்த ஆதாரமும் சேகரிக்கப்படவில்லை. மேலும் அந்த அமைப்பில் இருந்து இவர் பெறப்பட்டதாகச் சொல்லப்படும் பணத்தைப் பற்றிய ஆதாரங்களும் விசாரணை அதிகாரிகளிடம் இல்லை.”  என்று கூறியதாக ’லைவ் லா’ இணையதளம் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்