Aran Sei

ஸ்வீடன் நிறுவனத்திடம் நிதின் கட்காரி லஞ்சம் பெற்ற செய்தி – விசாரணை கோரும் காங்கிரஸ் கட்சி

ஸ்வீடன் வாகன தயாரிப்பு நிறுவனம் ஸ்கேனியா, இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து வணிகம் செய்ய முன்வந்தது என்ற செய்தி குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வியாழனன்று (மார்ச் 11) கோரியிருப்பதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் மகாராஷ்டிரா முதலமைச்சர் பிரித்விராஜ் சவான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்வீடன் அரசு செய்தி ஒளிபரப்பு நிறுவனம் எஸ்விடி (SVT)  மற்றும் ஜெர்மன் அரசு செய்தி ஒளிபரப்பு நிறுவனம் இசட்டிஎஃப் (ZDF) ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள ஒரு புலனாய்வு ஆவணப்படத்தில், “ஸ்வீடன் வாகன தயாரிப்பாளர்களின் ஊழல் தொடர்பான கடுமையான வழக்குகள்” வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய பிரதமர் மோடி முழுமையான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுவார் என்று நம்புவதாக சவான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு – ஸ்மிருதி இரானி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்

மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்காரியின் அலுவலகம் இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை, ஜோடிக்கப்பட்டவை என ஏற்கனவே மறுத்துள்ளது

“பேருந்து ஒப்பந்த ஊழல் பற்றிய செய்திகள் உண்மையில் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன. ஸ்வீடன் அரசின் அறிக்கைகள், மத்திய அரசு, பல்வேறு அமைச்சர்கள், பல்வேறு மாநில அரசுகள் மீது குற்றம் சாட்டுகிறது… இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என நாங்கள் (காங்கிரஸ்) கோருகிறோம்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்