Aran Sei

விவசாயிகளின் போராட்டத்தில் தேசவிரோத சக்திகள் – மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

விவசாயிகளின் போராட்டத்தின் போது தில்லியில் தேசவிரோத கருத்துகளைப் பேசியவர்களின் புகைப்படங்கள் காணப்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, விவசாயிகளை தவறாக வழிநடத்த சிலர் முயற்சிக்கின்றனர் என்றும் விவசாய சட்டங்கள் குறித்துப் பேச்சு வார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என்றும் மதிய அரசின், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று (டிசம்பர் 14) ’ஏஎன்ஐ’ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

போராடும் விவசாயிகளை தேச விரோதிகள் என்பதா – பாஜகவுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் கண்டனம்

”நாக்பூருக்கு அருகில் உள்ள நக்சலைட் ஆதிக்கம் உள்ள மாவட்டமான கட்ச்சிரோலியில்   கைது செய்யப்பட்ட ஒருவருக்கு, நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் கிடைக்காத்ததால் அவர் சிறையில் இருக்கிறார். அவருக்கும்  விவசாயிகளுக்கும் நேரடியாகவோ அல்லது  மறைமுக தொடர்போ  இல்லை. ஆனால் அவரது புகைப்படத்தைப் போராட்டத்தில் கண்டேன். என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை.” என்று கூறியுள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்தில் நகர்ப்புற நக்சல் மற்றும் மாவோயிஸ்ட்டுகள் ஈடுபடுவதாக எழுந்த கருத்துக்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது, அனைத்து விவசாயிகளையும் இதனுடன் தொடர்புப்படுத்தி பார்க்க தேவை இல்லை என்றும் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

மாவோயிஸ்ட் கொலை : ’போலி எண்கவுண்டர் என சந்தேகமாகவுள்ளது’-குடும்பத்தினர்

“தில்லி போராட்டத்தில் தேச விரோத கருத்துகளைப் பேசியவர்கள், நம் நாட்டுடனும் விவசாயிகளின் கோரிக்கைகளுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள். ஆனால், அவர்களின் புகைப்படங்கள் போராட்டங்களில் காணப்படுகின்றன. இதில் அவர்கள் எப்படி வந்தார்கள் என்பதை தயவுசெய்து சொல்லுங்கள். ” என்று கேள்வி எழுப்பியுள்ளதாக ’ஏஎன்ஐ’ தெரிவித்துள்ளது.

மேலும்,“போராட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி விவசாயிகளைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கும் சிலர் அங்கு உள்ளனர். இது தவறென்று நான் உணர்கிறேன். ”என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்