Aran Sei

பொது காப்பீடு நிறுவன பங்குகளை விற்பனை செய்ய அனுமதிக்கும் சட்ட திருத்தம் – தனியார்மயமாக்கும் ஏற்பாடு என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு.

க்களவையில் ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தியிருக்கும் பொது காப்பீடு தொடர்பான மசோதாவிற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு, மசோதாவை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

பொது காப்பீடு வணிகம் (தேசியமயமாக்கல்) சட்டம் 1972 -ஐ திருத்தம் செய்யும் வகையில், பொது காப்பீடு வணிகம் (தேசியமயமாக்கல்) திருத்த மசோதா 2021 என்ற பெயரில் புதிய மசோதாவை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.

கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிகையை 2௦ மடங்கு குறைத்து காட்டும் பீகார் அரசு – குற்றஞ்சாட்டிய சி.பி.ஐ(எம்.எல்)

பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களில் ஒன்றிய அரசு 51 விழுக்காடு பங்குகளை வைத்திருக்க வேண்டும் என்கிற சட்டப்பிரிவை நீக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

“பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களில் தனியார் பங்களிப்பை வழங்கும் நோக்கத்துடன் சட்டத்தின் சில விதிகளை திருத்துவது அவசியமாகிவிட்டது” என்று மசோதாவின் நோக்கம் கூறுகிறது.

வெளிவந்த உண்மையை எத்தனை நாளைக்கு மறைக்க முடியும் – பெகசிஸ் விவகாரம் குறித்து ஒன்றிய அரசுக்கு ப. சிதம்பரம் கேள்வி

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சித் தலைவர் என்.கே. பிரமசந்திரன், ”இது பொது காப்பீட்டு நிறுவனங்களை முற்றிலும் தனியார்மயமாக்குவதாகும். இதை ஏற்க முடியாது, அனுமதிக்க முடியாது. இந்த மசோதா தெளிவுற்றது, காலவரையற்றது மற்றும் அசல் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானது” என தெரிவித்துள்ளார்.

போராட்டங்கள் காரணமாக ஏற்பட்ட அமளியை மேற்கோள் காட்டிய பிரேமச்சந்திரன், ”சபை ஒழுங்காக நடைபெறாததால், எனது கருத்தை உறுதிப்படுத்த முடியவில்லை” என அவர் கூறியுள்ளார்.

”சபை முறையாக நடைபெறாததால், இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று மதிப்பிற்குரிய நிதியமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என காங்கிரஸ் உறுப்பினர் சுரேஷ் கொடிக்குன்னில் தெரிவித்துள்ளார்.

பெகசிஸ் உளவு மென்பொருளை தவறாக பயன்படுத்திய நாடுகள் – சேவையைத் தடை செய்த என்.எஸ்.ஒ நிறுவனம்

எதிர்கட்சியினர் கருத்துக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “உறுப்பினர் சுட்டிக்காட்டியவை சரியாக நிறுவப்பட்டிருக்கவில்லை, மசோதாவின் நோக்கம் தனியார்மயமாக்குவது அன்று. பொதுத் துறை நிறுவனங்களில், பொது மக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது” என கூறியுள்ளார்.

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்