Aran Sei

ஜம்முவில் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர் சித்ரவதை – தேசிய புலனாய்வு முகமை மீது முன்னாள் காவல்துறை அதிகாரி குற்றச்சாட்டு

ம்முவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை ( மார்ச் 26) விசாரணைக்கு அழைக்கப்பட்டவர் சித்ரவதைக்கு உள்ளாகி இருக்கிறார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்திருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய பயங்கரவாத தடுப்பு விசாரணை அமைப்பு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு டெலிவரி சேவை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த யுக்ராஜ் சிங்கை போதைப்பொருள் கடத்தல் மற்றும் வன்முறை தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் உத்தரவிட்டிருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடியின் வங்கதேச வருகைக்கு எதிரான போராட்டம் – இரண்டு நாட்களாக இணையதளம் முடக்கப்பட்டதாக முகநூல் தகவல்

விசாரணையின்போது யுக்ராஜ் சிங் தாக்கப்பட்டதாகவும், இதனால் அவர் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குடும்பத்தினர் கூறியுள்ளதாக தி இந்து செய்தி தெரிவிக்கிறது.

கிர்பான் (சீக்கியர்கள் வைத்திருக்கும் கத்தி) அணிந்திருந்ததற்காக தனது மருமகன் தேசிய புலனாய்வு அதிகாரிகளால் சித்ரவதைக்கு உள்ளாகி இருப்பதாக, யுக்ராஜ் சிங்கின் தாய்மாமாவும் முன்னாள் காவல்துறை அதிகாரியுமான சேவாக் சிங் தெரிவித்துள்ளதாக அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”அவர் என் தங்கையின் மகன், அவர் ஒரு அமிர்த்தாரி (ஞானஸ்தானம் பெற்றவர்). சீக்கியர்களின் மத உடையான கிர்பானை அவர் அணிந்திருக்கிறார். ஏன் கிர்பான் அணிந்திருக்கிறாய் என அதிகாரிகள் கேட்டுள்ளனர். இது மத சின்னம் என பதிலளித்ததற்கு அந்த அதிகாரி, அவரது தாயாரை இழிவுபடுத்தியதோடு, அவரைத் தாக்கியும் உள்ளார். அவர் செய்த குற்றம் என்ன? நீண்ட தாடியுடன் இருப்பதா?” என அவர் தி இந்து விடம் தெரிவித்துள்ளார்.

”ஆட்சியையே கவிழ்த்தவர் என் குடும்பத்தை எதுவும் செய்வார்”: பாஜக எம்எல்ஏ மீது பாதிக்கப்பட்ட பெண் புகார்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யுக்ராஜ் சிங்கின் முதுகு, கை, கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டிருக்கும் காணொளி ஒன்றை அவரது குடும்பம் வெளியிட்டுள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

”யுக்ராஜின் தந்தை நான்கு ஆண்டுகளாக முடங்கியுள்ளார். பெற்றோர்களைக் கவனித்து கொள்ளும் ஒருவர் ஏன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் என தெரியவில்லை. அவர் குற்றங்களில் ஈடுபட்டிருந்தால், சித்ரவதைக்கு பின்பு ஏன் விடுவிக்கப்பட்டார்?” என சேவாக் சிங் கேள்வி எழுப்பியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

முசாஃபர்நகர் கலவர வழக்கில் 6 பேர் விடுதலை: ஆதாரங்கள் இல்லையென நீதிமன்றம் தீர்ப்பு

இது தொடர்பாக அந்த அதிகாரிமீது புகார் அளித்தும், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை என குற்றம்சாட்டியுள்ள சேவாக் சிங், ”அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, நாகாலாந்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால், அவர்மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என அவர் தெரிவித்திருப்பதாக தி இந்து கூறியுள்ளது.

குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் அதிகாரியைத் தொடர்புகொண்டபோது, “இந்த வழக்குகுறித்து பேச விரும்பவில்லை. நான் வேறு வழக்கை விசாரித்து வருகிறேன்” என கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்