Aran Sei

புதிய நாடாளுமன்ற கட்டுமானத்தில் டாடா குழுமம் – ஏலமா அல்லது முறைகேடா – சுப்பிரமணிய சுவாமி கேள்வி

credits : pti

டந்த டிசம்பர் 10-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்தக் கட்டடம் மத்திய விஸ்டா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டடத்திற்கு அருகில் கட்டப்படவுள்ளது. அடுத்த19 மாதங்களில் இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பொதுப்பணித்துறையின் திட்டத்தின் படி, இந்தக் கட்டடம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள 118 வது பிளாட் எண்ணில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

credits : indian express
credits : indian express

புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் வென்றதில் முறைகேடுகளும் நலன் முரண்பாடும் இருப்பதாக ஷபூர்ஜி பல்லோன்ஜி (எஸ்.பி) குழுமம் குற்றம் சாட்டியது. ஷபுர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் தலைவர் பல்லோன்ஜி மிஸ்திரி, டாடா குழுமத்தின் 18.3% பங்குகளுடன் மிகப்பெரிய தனிநபர் பங்குதாரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் மாதம் இரண்டு கடிதங்களை எஸ்.பி குழுமம் மத்தியப் பொதுப்பணித்துறைக்கு அனுப்பிஇருந்தது. அதில், ” டாடா கன்சல்டிங் இன்ஜினீயர்ஸ் (டி.சி.இ) மற்றும் டாடா ப்ராஜக்ட்ஸ் லிமிடட் (டி.பி.எல்) ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஏல நடைமுறையில் பங்கேற்பது மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விதிகளுக்கு எதிரானது” என்று குற்றம்சாட்டியிருந்தது.

மேலும், ஏலத்தில் டிபிஎல் நிறுவனம் பங்கேற்பதற்கு வழி செய்யும் வகையில் ஏலம் எடுப்பதற்கான தகுதிகள் மற்றும் அளவுகோல்கள் மாற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் எஸ்.பி குழுமம் அந்தக் குற்றச்சாட்டுக் கடிதங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

நாடாளுமன்ற விஸ்டா கட்டிட முறைகேடு – குற்றச்சாட்டை வாபஸ் பெறுவதாக எஸ்பி குழுமம் அறிவிப்பு

இதையடுத்து புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவதற்கான ஏலத்தை டி.பி.எல் நிறுவனம் (ரூ.861.90 கோடி) பெற்றது. டாடா நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரரான எஸ்.பி குழுமம் (18.37 %) 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த உறவைத் தற்போது முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தது.

இந்நிலையில், பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி ”புதிய நாடாளுமன்ற வளாகத்தைக் கட்ட டாடா குழுமம் தேர்வு செய்யப்பட்டது எவ்வாறு என்று யாருக்காவது தெரியுமா? என்று தன் ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஏலத்தின் மூலமாக டாடா குழுமம் தேர்வு செய்யப்பட்டதா அல்லது 2ஜி அலைக்கற்றை ஊழலில் செய்தது போல முதலில் வருபவர்க்கே முன்னுரிமை எனும் அடிப்படையில் டாடா குழுமம் தேர்வு செய்யப்பட்டதா? என்று இந்த விவகாரம் குறித்து தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்