Aran Sei

ஒரே நாடு, ஒரே பாடத் திட்டம்: நரேந்திர மோடி

credit: ndtv.com

புதிய கல்விக் கொள்கை 2022-ம் ஆண்டுக்குள் நடைமுறை செய்யப்படும் என்று இந்திய பிரதமர் நேற்று நடைபெற்ற பள்ளிக் கல்விக்கான கூட்டத்தில் பேசியுள்ளார்.

கல்வி அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட “கல்வி திருவிழா” நிகழ்ச்சியின் பகுதியாக “இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பள்ளிக் கல்வி” என்ற தலைப்பில்  இணையம் வழியாக நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசிய மோடி, ஒரு புதிய சகாப்தத்துக்கான விதையை புதிய கல்விக் கொள்கை விதைக்கும் என்று கூறியுள்ளார். அதேபோல், இருபத்தி ஒன்றாம் நாற்றாண்டு இந்தியாவுக்கான புதிய வழிகாட்டியாக புதிய கல்விக் கொள்கை இருக்கும் என்று மோடி கூறியுள்ளார்.

பள்ளிகளில் கற்பிக்கப்படும் மொழி குறித்து மோடி பேசுகையில், குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு தாய் மொழியில் பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் தாய் மொழியுடன் ஆங்கிலம் உட்பட ஏதாவது ஒரு பன்னாட்டு மொழி கற்பிக்கப்படும் என்றும் அதேபோல் ஏதாவது ஒரு இந்திய மொழி கற்றுக்கொள்ள ஊக்கமளிக்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

பள்ளி கல்விக்கான புதிய பாடத்திட்டம் பற்றி பேசுகையில் மோடி, 2022-ம் ஆண்டுக்குள் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்படுகிற புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் இப்பாடத்திட்டம் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்றலை முழுமையாக இன்பம் நிறைந்ததாக மாற்றும் என்று கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் ஓரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வருவதில் உள்ள சிக்கல்கள் குறித்து பொது பள்ளிக்கான மாநில மேடையின் பொது செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுடன் பேசு போது, இது கல்வியை நீங்கள் சந்தையாக பார்க்கப்போகின்றீர்களா? அல்லது பண்பாட்டின் கூறாக பார்க்கப்போகின்றீர்களா? என்ற கேள்வியை பொருத்தது என்றார். இந்தியா என்பது பன்முக பண்பாடு கொண்ட நாடு. கல்வியும் மொழியும் பண்பாட்டின் கூறுகள் என்றும் பண்பாட்டிலிருந்துதான் பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“இந்தியா மொத்தத்துக்கும் ஒரே பாடத்திட்டம், ஒரே மாதிரியான் கற்றல் முறை, ஒரே மாதிரியான கற்றல் திறன் வெளிப்பாட்டு அளவுகோல் என்பதெல்லாம். கல்வியியல் செயல்பாட்டுக்கு உரியதல்ல என்றும் பாடத்திட்டங்களை அந்தந்த மாநிலங்கள் இன்னும் கூறுவதென்றால் அந்தந்த வட்டாரங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றும் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்