Aran Sei

’விவசாய மண்டிகளுக்குப் புதிய தள்ளுபடிகள்’ – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு

த்திய அரசின் விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போரட்டத்திற்கு மத்தியில், நேற்று (டிசம்பர் 5) ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு, மண்டி வர்த்தகர்கள் மற்றும் விவசாயப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கும் இரண்டு  திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டங்கள் மண்டிவரி மற்றும் பிற அபராதங்களுக்கு விலக்குகளுடன் வட்டி தள்ளுபடியையும் வழங்குகின்றன.

இந்தத் திட்டங்களின் மூலம் மண்டிக் கட்டணம், ஒதுக்கீடு கட்டணம் மற்றும் பிற நிலுவைத் தொகைகளுக்குச் செலுத்த வேண்டிய வட்டிக்கு 75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படவுள்ளது என்று தி இந்து தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மசோதாக்கள் – ராஜஸ்தானிலும் நிறைவேற்றம்

இந்தப் பொதுத் தள்ளுபடி திட்டங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் விவசாயச் சந்தைகளுக்கும், அதைப் பதப்படுத்தி விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கும் நிவாரணம் கிடைக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு, கடந்த ஆண்டு, செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, முழு நிலுவைத் தொகையில் 75 சதவீத விலக்கு அளிக்கப்படும் என்றும் இந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரைக்குமான வட்டியில் 25 சதவீத விலக்கு அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

’தில்லி சலோ’ : தலைநகர் நோக்கிப் படையெடுக்கும் ராஜஸ்தான் விவசாயிகள்

மேலும், விவசாயப் பொருட்களைப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு, 2005 ஆண்டு ஏப்ரல் 27 தேதி முதல் கடந்த ஆண்டு டிசம்பர் 31 தேதி வரையில், மாநிலத்திற்கு வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை மற்றும் விவசாயப் பொருட்களின் நிலுவைத் தொகையில் 75 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படும். அதே நேரத்தில் வட்டி மற்றும் அபராதத்தில் 100 சதவீதம்  விலக்கு வழங்கப்படும்.

குறைந்தபட்ச ஆதார விலை – மாநிலங்கள் கேட்டது ஒன்று, மத்திய அரசு கொடுத்தது ஒன்று

2020-21 காலகட்டத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை வாங்குவதற்காக, மண்டி மற்றும் விவசாயிகளின் நலன்வரி தள்ளுபடி செய்யும் திட்டத்திற்கு முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் முன்பு ஒப்புதல் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் உற்பத்தியாகும் பருப்பு, தினை , பார்லி மற்றும் கடுகு ஆகியவற்றில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை, ராஜஸ்தானில் இருந்தே வருகிறது என்று குறிப்பிட்டுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

விவசாய மசோதாக்கள் : உள்ளூர் வணிகர்களுக்கு பதில் கார்ப்பரேட்டுகள்

ராஜஸ்தான் பாலைவனப் பகுதியாக இருப்பதால் மற்ற மாநிலங்களை விட விவசாயப் பொருட்களின் உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது என்றும், அதனால் குறுவை சாகுபடிக்கான குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட்டித் தர வேண்டும் என ராஜஸ்தான் மாநில அரசு, மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது என்று ‘தி வயர்’ தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், நாட்டின் மொத்த உற்பத்தியில் 48.6 சதவீத தினையையும், 58.9 சதவீத கொண்டைக் கடலையையும், சோயா, மக்காச்சோளம் போன்றவற்றைக் கணிசமாக உற்பத்தி செய்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்