Aran Sei

நீட் விடைத்தாள்கள் மதிப்பீட்டில் முறைகேடு – மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் மாணவர்கள்

credits : the washington post

நீட் தேர்வு எழுதிய 14 மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அவர்களுடைய விடைத்தாளை தேசிய தேர்வு முகமைக்கு நேரடியாகச் சென்று சரி பார்க்க விரும்புவதாகவும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கபட்டுள்ளதாக பார் அண்ட் பென்ச் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயந்த் நாத் தலைமையிலான அமர்வுக்குமுன் விசாரணைக்கு வந்ததுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் விடைத்தாளை சரிபார்த்து கொள்ளவும் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் அனுமதியளித்துள்ளார்.

நீட் தேர்வு – அரசு ஆதரவுடன் சாதிக்கும் தெலங்கானா எஸ்சி, எஸ்டி மாணவர்கள் : நவநீத கண்ணன்

கடந்த அக்டோபர் 5-ம் தேதி, தேசிய தேர்வு முகமை வலைதளத்தில் நீட் விடைத்தாள்கள் (ஓஎம்ஆர் ஷீட் ) பதிவேற்றம் செய்யப்பட்டன. ஆனால் தாங்கள் அளித்த பதில்களும் பதிவேற்றம் செய்யப்பட்ட விடைத்தாளில் இருந்த பதில்களும் வெவ்வேறாக இருந்தாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். அவர்கள் தேர்வு செய்து பதிலளித்த கேள்விகளும், பதிலளிக்காமல் விட்ட கேள்விகளும் எண்ணிக்கையில் மாறுப்பட்டு இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர்கள் நீட் விடைத்தாள்களில் மோசடி நடந்துள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

தமிழக மருத்துவத் துறையை சீர்குலைக்கும் நீட் தேர்வு – சி.நவநீத கண்ணன்

விடைத்தாள்கள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவ்வாறு நடைபெறவில்லை என்றால் நியாயமற்ற முறையில் நடக்கும் விடைத்தாள் மதிப்பீட்டினால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உண்மையான விடைத்தாள்களைச் சரிபார்க்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

மேலும் மனுதாரர்கள் விடைத்தாளை சரி பார்ப்பதுக்கு, தேசிய தேர்வு முகமை வகுத்துள்ள நடைமுறை அதிக செலவு வைப்பதாகவும், நியாயமற்ற முறையில் இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு டிசம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகளில் குழப்பம் – இணையத்தில் இருந்து திடீர் நீக்கம்

முன்னதாக, நீட் தேர்வு முடிவுகள் வெளியான சமயத்தில் பல குளறுபடிகள் இருந்ததால் அந்த முடிவுகள் தேசிய தேர்வு முகமையிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்