Aran Sei

பரூக் அப்துல்லா தொழுகைக்குச் செல்ல தடை: தேசிய மாநாட்டுக் கட்சி குற்றச்சாட்டு

Credits The Hindu

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீ நகர் ஹஸ்ரத்பால் மசூதியில் மிலாது நபி தினத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புத் தொழுகையில் கலந்துகொள்ள இருந்த ஒன்றுபட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, அவரது வீட்டில் தடுக்கப்பட்டுள்ளார் என்று தேசிய மாநாட்டுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தேசிய மாநாட்டுக் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், “ஜம்மு காஷ்மீர் நிர்வாகம்,  தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவைத் தொழுகைக்கு வெளியே வரமுடியாதவாறு வீட்டிலேயே தடுத்து வைத்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளது.

 

”ஹஸ்ரத்பால் தர்காவில் சிறப்புத் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பரூக் அப்துல்லா தடுக்கப்பட்டுள்ளார். அடிப்படை உரிமையான வழிபாட்டு உரிமையைப் பறிப்பதை ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. குறிப்பாக மிலாது நபி திருநாளில் தொழுகை நடத்தவிடாமல் தடுக்கிறார்கள்.” என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்தி ட்விட்டரில், “பரூக் அப்துல்லா மிலாது நபி அன்று தொழுகைக்கு வெளியே வர முடியாதவாறு தடுக்கப்பட்டிருப்பது மூலம், ஜம்மு காஷ்மீர் மீது இந்திய அரசு இரும்புக் கரம் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது வெளிப்படையாகிறது.” என்று குற்றம் சாட்டிப் பதிவிட்டுள்ளார்.

 

தொடர்ந்து, “இது எங்களுடைய அடைப்படை உரிமையை மீறும் செயல். இந்தச் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.” எனவும் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்