Aran Sei

தேசியப் பாதுகாப்புச் சட்டம் – தனி மனித உரிமைக்கு எதிராகச் செயல்படுகிறது – அலகாபாத் உயர் நீதிமன்றம்

credits : financial express

அரசுக்கு அதிக அளவிளான அதிகாரத்தை வழங்கும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் மிகக் கவனமாகக் கையாளப்பட வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது என லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள ஜாவேத் சித்திக்கின் ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் பிரிந்திங்கர் திவாகர் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவரைத் தடுப்புக் காவலில் வைக்கக் கோரிய மனுவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

சிஏஏ எதிர்ப்பாளர்களின் தனியுரிமைக்கு ஆபத்து – அலகாபாத் உயர் நீதிமன்றம்

”நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படாமல் ஒருவரைத் தடுத்து வைக்க வழிவகை செய்யும் இந்தச் (தேசியப் பாதுகாப்புச் சட்டம்) சட்டம் நிர்வாகிக்கு அசாதாரண அதிகாரத்தை அளிக்கிறது. இந்தச் சட்டம் கண்டிப்பாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மேலும் இந்தச் சட்டத்தை நிர்வாகிகள் மிகுந்த கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்” என அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது என லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

”தடுப்புக் காவல் நடவடிக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21 வது பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள தனி மனிதச் சுதந்திரத்தைப் பெரிதும் பாதிக்கிறது. எனவே நிர்வாகிகள் சட்டதிட்டத்திற்கு உட்பட்டுத் தடுப்புக் காவல் உத்தரவை நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பின் மாண்புகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்பதை உறுதி செய்ய வேண்டும்.

‘லவ் ஜிகாத்’ – சேர்ந்து வாழும் உரிமை அடிப்படையானது – அலகாபாத் உயர்நீதிமன்றம்

“அதிகாரிகள் தரப்பில் இருந்த அலட்சியமான போக்கு மனுதாரரின் உரிமையையும் சட்டத்தின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பையும் மறுக்கிறது. இது அவரின் சட்டப் போராட்டத்திற்கு எதிரானது.  எனவே, இதை அனுமதிக்கக் கூடாது. நிறுவப்பட்டுள்ள சட்ட மற்றும் நடைமுறை விதிமுறைகள் மீறல்” எனக் கூறியுள்ளனர்.

”ஆலோசனைக் குழு நிர்ணயிக்கப்பட்ட தேதியில் கூட, அதிகாரிகள் மனுதாரரின் தரப்பின் வாதத்தை முன் வைக்கவில்லை. தாமதத்திற்கான நியாயமான விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை” என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“பசுவதை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது” – அலகாபாத் உயர்நீதிமன்றம்

இந்த ஆண்டு ஜூன் மாதம் ஜீவான்பூரின் சரைக்வாசா பகுதியில் உள்ள படேதி கிராமத்தில் தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது சித்திக்கி கைது செய்யப்பட்டுள்ளார். தீ வைப்பு மற்றும் கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட அவர் மாவட்ட நிர்வாகத்தால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சித்திக்கி தரப்பின் விளக்கத்தை அதிகாரிகள் ஆலோசனைக் குழுவிற்கு முன் சமர்ப்பிப்பதற்கு ஏற்பட்ட தாமதத்திற்கு நியாயமான விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை என்பதால் அவரை விடுவிப்பதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்