Aran Sei

நரேந்திர மோடி மைதானத்தில் ரிலையன்ஸ், அதானி முனைகள் – ராகுல் காந்தியின் ’நாம் இருவர், நமக்கு இருவர்’ கிண்டல்

குஜராத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு நரேந்திர மோடி பெயர் வைத்திருப்பதோடு, அதன் பகுதிகளுக்கு ரிலையன்ஸ், அதானி பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதை, காங்கிரஸ் தலைவர், “நாம் இருவர், நமக்கு இருவர்” என விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், ”உண்மை தன்னை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பது அழகானது. நரேந்திர மோடி மைதானம் -அதானி முனை – ரிலையன்ஸ் முனை – ஜெய் ஷா தலைமையில் – #நாம்இருவர்நமக்குஇருவர்” என ட்வீட் செய்திருந்தார்.

குடியரசு தலைவர் மைதானத்தை திறந்த உடனேயே அதற்கு மறுபெயரிடும் முயற்சி தவறானது என்றும், இது சர்தார் படலுக்கு அவமானம் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி குற்றசாட்டிய நிலையில், இதற்குப் பதிலளித்துள்ள அரசு, நரேந்திர மோடியின் பெயர் புதிதாக கட்டப்பட்ட மோடேரா மைதானத்திற்கு மட்டுமே சூட்டப்பட்டுள்ளது என்றும், முழு விளையாட்டு வளாகமும் சர்தார் பட்டேலின் பெயரிலேயே விளங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடி, அமித் ஷா  வழிநடத்தும் மத்திய அரசு, அம்பானி, அதானி நலனுக்காகவே செயல்படுகிறது என்று கூறி, அது ”நாம் இருவர் நமக்கு இருவர்” என்ற முழக்கத்தை பிரதிபலிக்கிறது என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்