Aran Sei

’அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட சிறையில் அனுமதி இல்லை’ – பேராசிரியர் சாய்பாபாவின் வழக்கறிஞர்

ன்னை பார்க்க வருபவர்கள் கொண்டு வரும் புத்தகங்கள், வெற்று காகிதத் தாள்கள், துண்டு மற்றும் பிசியோதெரபிக்கான கருவி போன்ற பொருட்களை அனுமதிக்க சிறை அதிகாரிகள் மறுப்பதாக பேராசிரியர் ஜி.என். சாய்பாபா குற்றம் சாட்டியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் கட்சிரோலி நீதிமன்றம், டெல்லி பல்கலைக்கழக முன்னாள்  பேராசிரியர் சாய்பாபா உட்பட ஐந்து பேருக்கும் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புகள் இருப்பதாகவும் நாட்டிற்கு எதிராக சதித்திட்டம் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியது. அப்போதிருந்து, அவர் நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

`மருந்துகளைக் கூட கொடுக்க மறுக்கிறார்கள்” – பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரம் இருக்க முடிவு

பேராசிரியர் சாய்பாபா 90 சதவீத உடல் குறைபாடுகளுடன் சக்கர நாற்காலியின் உதவியுடனேயே இருந்து வருகிறார்.

பேராசிரியர் சாய்பாபாவுக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களையும் நாங்கள் வழங்குவதற்கு ஒத்துக்கொண்டாலும், அதற்காக எல்லாவற்றையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்று நாக்பூர் மத்திய சிறையின் மூத்த அதிகாரி ஒருவர் தி இந்துவிடம் கூறியுள்ளார்.

`பழங்குடியின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தால் மாவோயிஸ்டா?’ – பள்ளி ஆசிரியைக் கைது

நேற்று (டிசம்பர் 26) பிடிஐ-யுடன் பேசிய பேராசிரியர் சாய்பாபாவின் வழக்கறிஞர் ஆகாஷ் சரோட், மூன்று நாட்களுக்கு முன்பு அவருக்கு தேவைப்படும் 34 பொருட்களை கொடுக்க சென்றேன். ஆனால், அதில் 13 பொருட்களை மட்டுமே சிறை அதிகாரிகள் அனுமதித்தனர் என்று கூறியுள்ளார்.

மேலும், “ஒரு மாதத்திற்கு முன்பு, பேராசிரியர் சாய்பாபா தனக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வெளியில் இருந்து கொண்டு வரக்கூடிய பொருட்கள் பற்றி சிறை அதிகாரிகளிடம் கூறியிருந்தார். அவற்றை அவரது குடும்பத்தினர் கொடுத்தனுப்ப வேண்டும் என்பதற்காக, அவர் அந்த பொருட்களின் பட்டியலை எழுதி, அதை சிறை அதிகாரிகளிடம் ஒரு விண்ணப்பமாக சமர்ப்பித்தார்.” என்று ஆகாஷ் சரோட் தெரிவித்துள்ளார்.

மாவோயிஸ்ட் கொலை : ’போலி எண்கவுண்டர் என சந்தேகமாகவுள்ளது’-குடும்பத்தினர்

“அதன்படி, அவரது குடும்பத்தினர் இந்த பொருட்களை எனக்கு அனுப்பினார்கள். டிசம்பர் 24 ஆம் தேதி, பொருட்களின் பட்டியலுடன், அதில் உள்ள பொருட்களுடனும் சிறைக்குச் சென்றேன். இந்த பொருட்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முயற்சித்தேன். ஆனால், அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த பட்டியலில் உள்ள எந்தவொரு பொருளும், பாதுகாப்பு அச்சுறுத்தலையோ அல்லது கொரோனா தொற்று பரவுவதற்கான ஆபத்தையோ ஏற்படுத்தாது.”என்று பிடிஐ-யிடம் குறிப்பிட்டுள்ளார்.

’மாவோயிஸ்ட்’ வழக்கில் ஜாமீன். போராடுவது தேச துரோகமாகாது – கேரள நீதிமன்றம்

மேலும், ” மூன்று புத்தகங்கள், 200 பக்க வெற்று வெள்ளை தாள்கள், ஒரு எழுதும் அட்டை, இந்தியா டுடே பத்திரிகை, அவரது பிசியோதெரபிக்கு உதவும் 1 கிலோ எடைக்கொண்ட கருவி, ஷாம்பு பாட்டில், கம்பளி தொப்பி, கைக்குட்டை, துண்டு மற்றும் ஒரு வெள்ளை சட்டை ஆகியவை சிறை அதிகாரிகளால் மறுக்கப்பட்டன. மொத்தம் உள்ள 34 பொருட்கள் இருந்தன. ஆனால் 13 மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன.” என்று ஆகாஷ் சரோட் பட்டியலிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்