Aran Sei

ஹிஜாப் அணிந்ததால் சக மாணவர்கள் என்னை தனிமைப்படுத்தினர் – கராத்தே சாம்பியன் அலியா அசாதி வேதனை

ஹிஜாப் அணிந்து வந்த காரணத்தினால் என் சக மாணவர்கள் என்னைத் தனிமைப்படுத்தினார்கள். மேலும், நாங்கள் குறிவைக்கப்பட்டோம், கண்ணியமாக நடத்தப்படவில்லை” என்று ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த மாணவிகளில் ஒருவரான அலியா அசாதி தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் விவகாரம் – உயர்நீதிமன்ற தீர்ப்பால் தேர்வுகளை தவறவிடும் இஸ்லாமிய மாணவிகள்

உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த அலியா அசாதி ஒரு கராத்தே சாம்பியன் ஆவார். கர்நாடக அளவில் பல தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ” ஹிஜாப் அணிய வேண்டும் என்று அலியா அசாதியை நாங்கள் ஊக்குவித்தோம், ஆனால் ஒருபோதும் அவளது லட்சியத்திற்கு இடையூறாக இருந்ததில்லை” என்று அலியா அசாதியின் தந்தை தெரிவித்துள்ளார்.

மேலும், தனது மகள் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவள் என்ற குற்றச்சாட்டையும் அலியா அசாதியின் தந்தை மறுத்துள்ளார்.

கர்நாடக நீதிமன்றத்தில் ஹிஜாப் தடைக்கு எதிராக வழக்குத் தொடுத்தவர்கள் தீவிரவாத அமைப்புகளைச் சார்ந்தவர்கள், தேசதுரோகிகள் என்று மூத்த பாஜக தலைவர் யஷ்பால் சுவர்ணா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாணவிகள் அல்ல, தேசதுரோகிகள் தான் ஹிஜாபுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர் – பாஜக மூத்த தலைவர் யஷ்பால் சுவர்ணா

ஹிஜாப் அணிய அனுமதிக்கும் வேறொரு கல்லூரியைத் தேடி வருகிறோம் என்று அலியா அசாதியின் தந்தை கூறியுள்ளார்.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்