Aran Sei

காஷ்மீர் பண்டிட்கள் கொண்டாடும் ஹெராத் பண்டிகை – வாழ்த்துகளை பகிரும் இஸ்லாமியர்கள்

Credit : The Hindu

ந்துக்களின் பண்டிகையான மகா சிவராத்திரிக்கு இணையாக காஷ்மீர் பண்டிட்கள் கொண்டாடும் ஹெராத் பண்டிகைக்கு, இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மக்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

”உலகெங்கிலும் உள்ள காஷ்மீர் பண்டிட்களுக்கு ஹெராத் வாழ்த்துகள். இந்த சிறப்பு நாளில் உங்கள் பிரார்த்தனைகள் அனைத்து பதிலளிக்கப்படட்டும்” எனத் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முஃப்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “எங்கள் காஷ்மீரி பண்டிட் சகோதரர்களுக்கு ஹெராத் போஸ்தே வாழ்த்துகள். இந்த சந்தர்ப்பம் உங்களுக்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதியைத் தரட்டும்” என பதிவிட்டுள்ளார்.

இஸ்லாமியர்களுக்கும் காஷ்மீரி பண்டிட்களுக்கும் இடையிலான நல்ல நாட்களுக்கு மீண்டும் காஷ்மீர் பள்ளத்தாக்கு திரும்ப வேண்டும் என மக்கள் மாநாட்டுக் கட்சியின் தலைவர் சஜாத் கனி லோன் தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கும் வாழ்த்து செய்தியில், ”ஹெராத் வாழ்த்துகள். இந்த பண்டிகை அனைவருக்கும் பழைய நினைவுகளை நினைவுபடுத்துகிறது. ஹெராத் சால், மீன் குழம்பு, காரசாரமான உணவு, நனைந்த அரிசி மற்றும் யங்கா. மிக முக்கியமாக அன்பு. இவை நாம் ஒற்றுமையாக இருந்த நாட்களை நினைவுபடுத்துகிறது. அந்த நாட்கள் திரும்ப வேண்டும்.” என லோன் பதிவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த யூசுப் தாரிகமி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்திருக்கும் வாழ்த்து செய்தியில், “காஷ்மீரின் சமீபத்திய வரலாறு சோகங்கள் நிறைந்தது மற்றும் காஷ்மீரி பண்டிட்களின் இடப்பெயர்வு இந்த வரலாற்றில் மிக சோகமான பகுதியாகும். இன்று, இந்த பண்டிகையின் கொண்டாட்டத்தின்போது, காஷ்மீரியின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமான மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை இந்த பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.

”காஷ்மீரி பண்டிட்கள் இல்லாமல் காஷ்மீரின் தத்துவம் முழுமையடையாது, அவர்கள் கண்ணியமாகத் திரும்புவதற்கு நாம் பாடுபட வேண்டும்.” என தாரிகமி கூறியுள்ளார்.

காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் காஷ்மீர் பொதுமக்களுக்குக் காஷ்மீரில் இல்லாத பண்டிட்களுக்கு இணைய வழியாக தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Source : the hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்