Aran Sei

பாங்கு ஒலியின் அளவை குறைக்க கூறி அலகாபாத் பல்கலைக்கழக துணைவேந்தர் புகார் – கோரிக்கையை ஏற்ற மசூதி நிர்வாகம்

த்தரபிரதேசம் அலகாபாத் லால் மசூதியின் பாங்கு (தொழுகைக்கான அழைப்பு) ஒலி பாதியாகக் குறைக்கப்பட்டிருப்பதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

பாங்கு ஒலியைப் பாதியாகக் குறைக்க வேண்டும்,   ஒலிபெருக்கியின் திசையை தன் வீட்டின் திசையில் இருந்து வேறுபுறம் திருப்பி வைக்க வேண்டும் என மாவட்ட நீதிபதிக்கு மார்ச் 3-ம்  தேதி அலகாபாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சங்கீதா ஸ்ரீவத்சவா எழுதிய கடிதத்தில் கோரப்பட்டிருந்ததை அடுத்து மசூதி நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நீதிபதி பானு சந்திர கோஸ்வாமிக்கு எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், ”தினமும் அதிகாலை பாங்கு ஒலிக்கப்படுவதால், சீக்கிரம் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்க நேரிடுகிறது. இது மிகவும் கடினமாக இருக்கிறது, அதன்பிறகு தூங்க முயற்சித்து முடியாமல் போகிறது” என சங்கீதா கூறியிருப்பதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை நீதிமன்றங்கள் கவனமாக விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அறிவுரை

”இதனால் நாள் முழுவதும் தலைவலி ஏற்படுவதோடு, பணிநேரம் பாதிக்கப்படுகிறது” என கூறிய சங்கீதா, தான் எந்த மதத்திற்கு எதிரானவள் இல்லை என்றும், ஒலிப்பெருக்கி இல்லாமலும் பாங்கு ஒலிக்க முடியும் என்றும், அந்தக் கடிதத்தில் தெரிவித்திருப்பதாக, தி வயர் தெரிவித்துள்ளது.

ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் சாப்பிடும் காலை உணவு செஹ்ரிஅறிவிப்பு குறித்தும் புகார் கூறியிருந்த ஸ்ரீவத்சவ, “இந்த நடைமுறை மற்றவர்களுக்கு ஒரு இடையூறு உருவாக்குகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து சமூகங்களின் மதச்சார்பற்ற மற்றும் அமைதியான சகவாழ்வு முறையை உருவாக்குகிறது, அது கடைப்பிடிக்கப்பட வேண்டும்” என அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து பள்ளிப்பாடம் – காவல்துறை வழக்குப்பதிவு

இந்தக் கடிதத்தின் நகலை அலகாபாத் மாவட்ட காவல்துறை ஆணையர், காவல்துறைத் தலைவர், மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆகிய அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ளதாகவும், இது தொடர்பாக விரைவில்  நடவடிக்கை எடுக்கப்படும் என பிரக்யாராஜ் காவல்துறை தலைவர் கவிந்திர பிரதாக் சிங் தெரிவித்திருப்பதாகவும் தி வயர் கூறியுள்ளது.

தி வயர் இணையதளத்திடம் பேசிய லால் மசூதி என்றழைக்கப்படும் மஸ்ஜித் இ நூரின் பராமரிப்பாளர் கலிமுர்ரஹ்மான், “மசூதியின் பாங்கு ஒலி பாதியாகக் குறைப்பட்டதோடு, ஒலிபெருக்கியின் திசையும் வேறு பக்கமாகத் திருப்பபட்டுள்ளது. இது தொடர்பாக அவர் எங்களை அணுகியிருந்தால் பிரச்னை சுமூகமாக முடிந்திருக்கும, அவர் வீடு மசூதியில் இருந்து 400 மீட்டர் தொலைவில் தான் உள்ளது” என கூறினார்.

இது தொடர்பாக அலகாபாத் பல்கலைக்கழக துணைவேந்தரிடம்  கருத்து கேட்க தி வயர் முயற்சித்த போது, “குடும்ப விழா” காரணமாக ஊரில் இல்லை என அவரது அலுவலகம் கூறியிருக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்